சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குடும்பத்தகராறில் மனைவி ஆத்திரம்: கொதிக்கும் எண்ணெய்யை தலையில் ஊற்றி கணவன் கொலை

Updated : செப் 08, 2021 | Added : செப் 07, 2021 | கருத்துகள் (21)
Share
Advertisement
நாமக்கல்:குடும்பத் தகராறில், ஆத்திரம் அடைந்து, கொதிக்கும் எண்ணெய்யை, தலையில் ஊற்றி, கணவரை கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்தனர்.நாமக்கல் ஏ.எஸ். பேட்டையை சேர்ந்தவ டைலர் தங்கராஜ், 50. அவரது மனைவி செல்வராணி, 45. தம்பதியருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். தையல் தொழில் செய்து வந்த தங்கராஜ், தினமும் குடித்துவிட்டு வருவதை வழக்கமாக கொண்டிருந்தார்.மேலும், போதையில், மனைவி

நாமக்கல்:குடும்பத் தகராறில், ஆத்திரம் அடைந்து, கொதிக்கும் எண்ணெய்யை, தலையில் ஊற்றி, கணவரை கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்தனர்.



latest tamil news




நாமக்கல் ஏ.எஸ். பேட்டையை சேர்ந்தவ டைலர் தங்கராஜ், 50. அவரது மனைவி செல்வராணி, 45. தம்பதியருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். தையல் தொழில் செய்து வந்த தங்கராஜ், தினமும் குடித்துவிட்டு வருவதை வழக்கமாக கொண்டிருந்தார்.மேலும், போதையில், மனைவி மற்றும் குழந்தைகளை தகாத வார்த்தையால் பேசுவதுடன், அடித்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த, 2ல், மாலை, 6:30 மணிக்கு, போதையில் வந்த தங்கராஜ், வழக்கம் போல், தனது மனைவி செல்வராணி, குழந்தைகளை திட்டியதுடன், அடித்து துன்புறுத்தி உள்ளார்.அதனால், ஆத்திரம் அடைந்த செல்வராணி, காய்ச்சி வைத்திருந்த எண்ணெய்யை எடுத்து, தனது கணவர் தங்கராஜின் தலைமையில் ஊற்றி உள்ளார். வலியால் கதறி துடித்த தங்கராஜை, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த தங்கராஜிடம், நாமக்கல் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஜெயந்தி, மரண வாக்குமூலம் பெற்றார். அதில், 'தன் மீது, கொதிக்கும் எண்ணையை ஊற்றியது, தனது மனைவி செல்வராணிதான்' என, தெரிவித்தாக தெரிகிறது.


latest tamil news


இதற்கிடையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தங்கராஜ், சிகிச்சை பலனின்றி, அதிகாலை, 5:30 மணிக்கு பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாக, நாமக்கல் போலீசார் வழக்கு பதிந்து, செல்வராணியை கைது செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
visu - Pondicherry,இந்தியா
10-செப்-202109:00:48 IST Report Abuse
visu மக்கள் தொகையை கட்டு படுத்தா விட்டால் எதையும் கட்டு படுத்த முடியாது அரசியல் வெற்றிக்காக இலவசங்களை அல்லி வீசுகிறார்கள் இதை சாமளிக்க டாஸ்மாக் திறந்து பல குற்றங்களுக்கு வலி கொனுகிறார்கள் எப்படி கள்ள நோட்டு அடித்தால் அடிச்சிவன் புழக்கத்தில் விட்டவன் எல்லாம் குற்றவாளியா அப்படி இந்த கொலைக்கு அரசும் காரணம்
Rate this:
Cancel
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
10-செப்-202107:40:34 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan ஆத்திரம வந்தால் கொலை செய்யலாமா? அந்தப் பெண்ணுக்கு அதிக பட்ச தண்டனை தரவேண்டும்
Rate this:
Cancel
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
10-செப்-202107:38:33 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan அப்பெண்ணை நடுத்தெருவில் நிற்கவைத்து சுட வேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X