சமத்துவமான கல்வி அவசியம் : கருத்தரங்கில் மோடி பேச்சு| Dinamalar

சமத்துவமான கல்வி அவசியம் : கருத்தரங்கில் மோடி பேச்சு

Updated : செப் 09, 2021 | Added : செப் 07, 2021 | கருத்துகள் (4+ 18)
Share
புதுடில்லி : ''எந்த ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும் எல்லாவற்றையும் உள்ளடக்கியதாக மட்டுமல்லாமல், சமத்துவத்துடனும் கல்வி இருக்க வேண்டும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி பேசினார். ஆசிரியர் தினத்தை முன்னிட்டு மத்திய கல்வி அமைச்சகம் சார்பில் 'ஷிக்ஷக் பர்வ' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடத்தப்படுகிறது. இதை பிரதமர் நரேந்திர மோடி நேற்று 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக
 சமத்துவமான கல்வி அவசியம் , மோடி பேச்சு

புதுடில்லி : ''எந்த ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும் எல்லாவற்றையும் உள்ளடக்கியதாக மட்டுமல்லாமல், சமத்துவத்துடனும் கல்வி இருக்க வேண்டும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி பேசினார். ஆசிரியர் தினத்தை முன்னிட்டு மத்திய கல்வி அமைச்சகம் சார்பில் 'ஷிக்ஷக் பர்வ' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடத்தப்படுகிறது.

இதை பிரதமர் நரேந்திர மோடி நேற்று 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக துவக்கி வைத்தார்.


வேண்டுகோள்

செவித்திறனற்ற மாற்றுத் திறனாளிகளுக்காக ஒலி மற்றும் எழுத்து இணைந்த சைகை மொழி காணொலிகள் தயாரிக்கப்பட்டு, இந்திய சைகை மொழி அகராதி உருவாக்கப்பட்டுள்ளது.அதேபோல பார்வையற்றோருக்கு ஒலி வாயிலாக பேசும் புத்தகங்கள் தயாரிக்கப்பட்டு உள்ளன.பள்ளியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் கல்விசார் தன்னார்வலர்கள், நன்கொடையாளர்கள், சி.எஸ்.ஆர். நிதி எனப்படும் 'கார்ப்பரேட் சோசியல் ரெஸ்பான்சிபிலிட்டி' நிதி வழங்குவோருக்காக விதயாஞ்சலி தளம் உருவாக்கப்பட்டுள்ளது.இந்த விழாவில் சைகை மொழி அகராதி, ஒலி மூலம் பேசும் புத்தகங்கள், சி.பி.எஸ்.இ. பள்ளிகளின் தரம் மற்றும் மதிப்பீட்டு கட்டமைப்பு, ஆசிரியர்களுக்கான 'நிஷித்தா' பயிற்சித் திட்டம், வித்யாஞ்சலி இணையதளம் ஆகியவற்றை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது:எந்த ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும் எல்லாவற்றையும் உள்ளடக்கியதாக மட்டுமல்லாமல் சமத்துவத்துடனும் கல்வி இருக்க வேண்டும்.இதனால் தான் இந்தியாவில் கல்வியின் ஒரு பகுதியாக சைகை மொழி அகராதி பேசும் புத்தகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
தேசிய விருது பெற்ற ஆசிரியர்களுக்கு வாழ்த்துகள். கடினமான சூழ்நிலையிலும் பணியாற்றிய உங்கள் முயற்சி பாராட்டுக்குரியது. இன்று துவங்கப்பட்ட திட்டங்கள், கல்வித்துறையின் எதிர்காலத்தை வடிவமைக்கும். பள்ளியின் தர மதிப்பீடு மற்றும் உறுதிப்பாடு, போட்டித்தன்மையை ஏற்படுத்துவதுடன் மட்டுமல்லாமல், மாணவர்களை எதிர்காலத்திற்கு தயார்படுத்தும்.அனைத்து ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் வீரர்களிடம் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளேன். ஒவ்வொரு வீரரும் 75 பள்ளிகளுக்குச் சென்று மாணவர்களுக்கு விளையாட்டு மீதான ஆர்வத்தை அதிகரிக்கச் செய்ய வேண்டும்.


விவாதம்

பள்ளிகளில் மாணவர்களுடன் ஒரு மணிநேரம் செலவிட்டு விளையாட்டுக்கு அவர்களை ஊக்கப்படுத்தவும் வேண்டுகிறேன். ஒலி வடிவிலான புத்தகங்கள், கல்வி முறையின் ஒரு பகுதி. இந்திய சைகை மொழிக்கான அகராதி உருவாக்கப்பட்டு உள்ளது. நாட்டில் முதல் முறையாக இந்திய சைகை மொழி, ஒரு பாடமாக பாடத்திட்டத்தில் சேர்க்கப் பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.செப். 17 வரை நடக்க உள்ள இந்த கருத்தரங்கில் புதிய கல்விக் கொள்கை உள்ளிட்ட கல்வித்துறை சார்ந்த அம்சங்கள் விவாதிக்கப்பட உள்ளன.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X