போன் ஒட்டு கேட்பு விவகாரம் பதிலளிக்க அரசுக்கு அவகாசம்

Added : செப் 07, 2021
Share
Advertisement
புதுடில்லி:போன் ஒட்டு கேட்பு விவகாரத்தில் நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்தக் கோரும் வழக்கில் பதிலளிக்க, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் மேலும் ஒரு வாரம் அவகாசம் அளித்துள்ளது.மேற்காசிய நாடான இஸ்ரேலில் தயாரிக்கப்பட்டுள்ள 'பெகாசஸ்' உளவு மென்பொருள் வாயிலாக அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர், சமூக ஆர்வலர் என நம் நாட்டைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்டோரின் மொபைல்

புதுடில்லி:போன் ஒட்டு கேட்பு விவகாரத்தில் நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்தக் கோரும் வழக்கில் பதிலளிக்க, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் மேலும் ஒரு வாரம் அவகாசம் அளித்துள்ளது.
மேற்காசிய நாடான இஸ்ரேலில் தயாரிக்கப்பட்டுள்ள 'பெகாசஸ்' உளவு மென்பொருள் வாயிலாக அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர், சமூக ஆர்வலர் என நம் நாட்டைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்டோரின் மொபைல் போன்கள் ஒட்டுக் கேட்கப்பட்டதாக செய்தி வெளியானது.

இது தொடர்பாக நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்தக் கோரி 'எடிட்டர்ஸ் கில்டு' எனப்படும் பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம் உட்பட பலர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளனர்.

இதில் மத்திய அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் விரிவாக பதில் மனு தாக்கல் செய்யும்படி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 'நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்பதால் அனைத்து தகவல்களையும் வெளிப்படையாக தெரிவிக்க முடியாது' என, மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.இந்த வழக்கு, தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது ''சில காரணங்களால் விரிவான பதில் மனு தாக்கல் செய்வது குறித்து அரசின் உயரதிகாரிகளை சந்திக்க முடியவில்லை. சற்று அவகாசம் அளிக்க வேண்டும்,'' என, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறினார்.அதை ஏற்று கூடுதல் அவகாசம் அளித்துள்ள அமர்வு வழக்கின் விசாரணையை 13ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X