அரசியல் செய்தி

தமிழ்நாடு

விநாயகர் சிலைகள் வைக்க தடை : சிலை செய்வோருக்கு நிவாரணம்

Updated : செப் 09, 2021 | Added : செப் 07, 2021 | கருத்துகள் (19+ 99)
Share
Advertisement
சென்னை: ''விநாயகர் சிலைகள் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள 3,000 மண்பாண்ட தொழிலாளர்களுக்கு, மழைக்கால பாதிப்பு நிவாரணத் தொகை போக, கூடுதலாக 5,000 ரூபாய் அளிக்கப்படும்,'' என, முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.பா.ஜ., நயினார் நாகேந்திரன்: வரும் 10ம் தேதி விநாயகர் சதுர்த்தி. ஹிந்துக்களின் முழு முதற் கடவுளாக இருக்கும் விநாயகரை வழிபட வேண்டும். விநாயகர் ஊர்வலம் நடத்த அனுமதி அளிக்க
 விநாயகர் சிலைகள் ,தடை, சிலைகள் , நிவாரணம்

சிலை செய்வோருக்கு நிவாரணம்

சென்னை: ''விநாயகர் சிலைகள் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள 3,000 மண்பாண்ட தொழிலாளர்களுக்கு, மழைக்கால பாதிப்பு நிவாரணத் தொகை போக, கூடுதலாக 5,000 ரூபாய் அளிக்கப்படும்,'' என, முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

பா.ஜ., நயினார் நாகேந்திரன்: வரும் 10ம் தேதி விநாயகர் சதுர்த்தி. ஹிந்துக்களின் முழு முதற் கடவுளாக இருக்கும் விநாயகரை வழிபட வேண்டும். விநாயகர் ஊர்வலம் நடத்த அனுமதி அளிக்க வேண்டும்.


கட்டுப்பாடுகள்



புதுச்சேரி, மஹாராஷ்டிரா, கர்நாடகா மாநிலங்களில் இதை அனுமதித்துள்ளனர். எனவே, விநாயகர் சிலையை வழிபடவும், ஊர்வலம் நடத்தவும் முதல்வர் அனுமதி அளிக்க வேண்டும்.

முதல்வர் ஸ்டாலின்: கொரோனா தொற்றை கட்டுப்படுத்த, அதிக அளவில் மக்கள் கூடுவதை தவிர்க்க, தேவையான கட்டுப்பாடுகளை செப்., 30 வரை நடைமுறைப்படுத்த, மத்திய உள்துறை அமைச்சகம், மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தி உள்ளது. நீதிமன்றமும் அதையே குறிப்பிட்டு காட்டியிருக்கிறது.கேரள மாநிலத்தில், ஓணம் மற்றும் பக்ரீத் பண்டிகை கொண்டாட்டங்களுக்கு அதிக அளவில் மக்கள் கூடுவதற்கு அனுமதி அளித்த காரணத்தினால் தான், அங்கே தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது.

தமிழகத்தில் இன்று வரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை முழுமையாக தடுக்கப்படவில்லை. அங்குமிங்கும் கொஞ்சம் இருக்கிறது. அந்த எண்ணிக்கை ஒரு நாளைக்கு 50 ஏறுகிறது; 50 குறைகிறது. இப்படி ஒரு சூழ்நிலை இருக்கிறது. எனவே தான், பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் நலனைக் கருத்தில் வைத்து, செப்., 15 வரை அனைத்து சமய விழாக்களையும் கொண்டாட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.இது, விநாயகர் சதுர்த்தி விழாவிற்கும் பொருந்தும்.பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட சமய விழா கொண்டாட்டங்களுக்கு மட்டுமே கட்டுப்பாடுகள்.


வாழ்வாதாரம் பாதிப்பு



: தனிநபர்களைப் பொறுத்தவரை, கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றி, தங்கள் வீடுகளில் கொண்டாடலாம் என, அரசு சார்பில் சொல்லப்பட்டிருக்கிறது. இதையெல்லாம் மனதில் வைத்து தான் தடை விதிக்கப்பட்டிருக்கிறதே தவிர, யாரும் தவறாக புரிந்து கொள்ள வேண்டாம். நம் மாநிலத்தில், மண்பாண்ட தொழிலில் ஈடுபட்டுள்ள 12 ஆயிரம் தொழிலாளர்களுக்கு, மழைக் காலங்களில் தொழில் செய்ய இயலாத நிலையில், நிவாரணமாக 5,000 ரூபாய் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.


இவர்களில் 3,000 தொழிலாளர்கள் திருவிழா காலங்களில் விநாயகர் சிலைகள் செய்யும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் கொரோனா நோய் தொற்றின் காரணமாக, பொது இடங்களில் விழாக்களைக் கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது. தங்கள் தொழிலை மேற்கொள்ள இயலாத நிலையில் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருக்கிறது.இதை கருத்தில் வைத்து அந்த 3,000 தொழிலாளர்களுக்கு மழைக்கால பாதிப்பு நிவாரணத் தொகை போக, கூடுதலாக 5,000 ரூபாய் நிவாரணத் தொகையுடன் மொத்தம் 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.

Advertisement




வாசகர் கருத்து (19+ 99)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
venkates - ngr,இந்தியா
09-செப்-202110:00:38 IST Report Abuse
venkates கருணாநிதி, பெரியாருக்கு சிலை வைக்கலாம் ?
Rate this:
Cancel
Sriram V - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
08-செப்-202117:36:26 IST Report Abuse
Sriram V tematically this government is disrespecting beliefs of hindus
Rate this:
Cancel
rajan -  ( Posted via: Dinamalar Android App )
08-செப்-202116:43:49 IST Report Abuse
 rajan சரி, இப்பவே சொல்லுங்க நஹாத்திரி, தீபாவளிப் பண்டிகைக்கருக்கும் தடை உண்டா இல்லையா? உங்க துதிபாடிகள் வீரம் இல்லாமணி, மற்றும் பாதிரியார்களை கேட்டுச் சொல்லுங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X