லாலு குடும்பத்தில் மீண்டும் குழப்பம் தேஜ் பிரதாப் தனி அமைப்பு துவக்கம்

Added : செப் 07, 2021
Share
Advertisement
பாட்னா:பீஹார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் யாதவின் குடும்பத்தில் மீண்டும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. உரிய மரியாதை கிடைக்கவில்லை எனக் கூறி, லாலுவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ் புதிய மாணவர் அமைப்பை துவக்கிஉள்ளார்.பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி அரசு அமைந்துள்ளது. முக்கிய எதிர்க்கட்சியான
 லாலு குடும்பத்தில் மீண்டும் குழப்பம் தேஜ் பிரதாப் தனி அமைப்பு துவக்கம்

பாட்னா:பீஹார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் யாதவின் குடும்பத்தில் மீண்டும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. உரிய மரியாதை கிடைக்கவில்லை எனக் கூறி, லாலுவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ் புதிய மாணவர் அமைப்பை துவக்கிஉள்ளார்.

பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி அரசு அமைந்துள்ளது. முக்கிய எதிர்க்கட்சியான லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தில் மீண்டும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.


கைவிட்டார்



லாலுவுக்கு இரண்டு மகன்கள், ஏழு மகள்கள் உள்ளனர். கட்சியில் யாருக்கு அதிக பலம் என்பதில், மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவுக்கும், இளைய மகன் தேஜஸ்வி யாதவுக்கும் போட்டி உள்ளது. லாலுவின் அரசியல் வாரிசாக தேஜஸ்வி பார்க்கப்படுகிறார்.

இந்நிலையில், தேஜ் பிரதாப் ஆதரவாளரான கட்சியின் மாணவர் பிரிவு தலைவர் ஆகாஷ் யாதவை அந்தப் பதவியில் இருந்து, மாநிலத் தலைவர் ஜகதானந்த் சிங் நீக்கி உள்ளார். இதற்கு தேஜ் பிரதாப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தேஜஸ்வியின் ஆதரவுடன் தான் ஜகதானந்த் இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் குற்றஞ்சாட்டினார்.

தேஜ் பிரதாபை நம்பி இருந்தால் சரிப்பட்டு வராது என்பதை உணர்ந்த ஆகாஷ் யாதவ், லோக் ஜன சக்தி கட்சியில் இணைந்தார். இதை அவமானமாக கருதியுள்ள தேஜ் பிரதாப், மாணவர் ஜன சக்தி பரிஷத் என்ற மாணவர் அமைப்பை புதிதாக துவக்கி உள்ளார். கடந்த 2019 லோக்சபா தேர்தலின்போதும் சகோதரர்களுக்குள் மோதல் ஏற்பட்டது.தன் ஆதரவாளர்களுக்கு தேர்தலில் போட்டியிட 'சீட்' வழங்காததால் தனியாக புதிய கட்சியை தேஜ் பிரதாப் துவங்கினார். குடும்பத்தார் அறிவுரையை ஏற்று, புதிய கட்சியை கைவிட்டார்.


நியாயம்

கட்சியில் சகோதரர்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள மோதலை, பா.ஜ., கிண்டல் செய்து வருகிறது.''தேஜ் பிரதாபை பார்த்தால் பாவமாக இருக்கிறது. சரியாக படிப்பு வராததால் பாதியிலேயே நிறுத்தியவர், தற்போது மாணவர் அமைப்பை துவக்கி உள்ளார்.''கட்சியை சொந்த சொத்தாக பார்க்கும் லாலு பிரசாத் யாதவ், தன் மகனுக்கே சரியான நியாயம் வழங்கவில்லை,'' என, பா.ஜ., செய்தி தொடர்பாளர் நிகில் ஆனந்த் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X