ஆப்கனில் இருந்து வந்தவர்கள் நிம்மதி

Added : செப் 07, 2021
Share
Advertisement
புதுடில்லி:சிறப்பு விமானத்தில் அழைத்து வரப்பட்ட 53 ஆப்கானியர்கள் உட்பட 78 பேர், டில்லியில் உள்ள ஐ.டி.பி.பி., மையத்தில் 14 நாள் தனிமைப்படுத்துதல் முடிந்து புறப்பட்டனர்.தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதால் அங்கிருந்த நம் நாட்டினர் விமானப்படை சிறப்பு விமானத்தில் அழைத்து வரப்பட்டனர். மத்திய அரசிடம் அடைக்கலம் கோரிய அந்நாட்டினரும் இந்த விமானத்தில்

புதுடில்லி:சிறப்பு விமானத்தில் அழைத்து வரப்பட்ட 53 ஆப்கானியர்கள் உட்பட 78 பேர், டில்லியில் உள்ள ஐ.டி.பி.பி., மையத்தில் 14 நாள் தனிமைப்படுத்துதல் முடிந்து புறப்பட்டனர்.

தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதால் அங்கிருந்த நம் நாட்டினர் விமானப்படை சிறப்பு விமானத்தில் அழைத்து வரப்பட்டனர். மத்திய அரசிடம் அடைக்கலம் கோரிய அந்நாட்டினரும் இந்த விமானத்தில் டில்லி வந்தனர்.

அனைவரும் டில்லியில் கொரோனா தனிமைப்படுத்துதலுக்கான ஐ.டி.பி.பி., எனப்படும் இந்தோ - திபெத் எல்லை போலீஸ் படை முகாமில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் 14 நாட்கள் முகாமில் இருந்த அவர்கள் வெளியேறினர். ஆப்கானிஸ்தானில் இருந்து டில்லி வந்த 78 பேரில், 53 பேர் ஆப்கனை சேர்ந்தவர்கள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X