கோடநாடு வழக்கு: மேல் விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் பச்சைக்கொடி

Updated : செப் 09, 2021 | Added : செப் 07, 2021 | கருத்துகள் (13+ 28)
Share
Advertisement
புதுடில்லி: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் மேல் விசாரணைக்கு தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவுக்கு சொந்தமான, நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் 2017 ஏப்ரலில் கொள்ளை நடந்தது. அப்போது எஸ்டேட் காவலாளி ஓம் பகதுார் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் என்ன கொள்ளை போனது என்பது இன்னும்
கோடநாடு வழக்G, மேல் விசாரணை,பச்சைக்கொடி!

புதுடில்லி: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் மேல் விசாரணைக்கு தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.

தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவுக்கு சொந்தமான, நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் 2017 ஏப்ரலில் கொள்ளை நடந்தது. அப்போது எஸ்டேட் காவலாளி ஓம் பகதுார் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் என்ன கொள்ளை போனது என்பது இன்னும் புதிராகவே உள்ளது.இந்த கொள்ளை சம்பவம் நடந்த அடுத்த சில நாட்களில் இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய பிரமுகரான கனகராஜ் என்பவர் சேலம் மாவட்டத்தில் சாலை விபத்தில் உயிரிழந்தார். அதற்கு அடுத்த நாள் கொள்ளை வழக்கில் தொடர்புடைய மற்றொரு நபரான சயான் என்பவர் குடும்பத்துடன் காரில் சென்று கொண்டிருந்தபோது விபத்தில் சிக்கினார். இதில் சயானின் மனைவி மற்றும் மகள் பலியாகினர்.கடந்த 2017 ஜூலையில் கோடநாடு எஸ்டேட் கண்காணிப்பு கேமரா ஆப்பரேட்டர் தற்கொலை செய்து கொண்டார்.

பரபரப்பை ஏற்படுத்திய கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தற்போது மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. 'இந்த வழக்கு குறித்து விசாரிப்பதற்காக தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தனிப்படை கோடநாடு கொலை தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணையை தொடரும் என தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் இந்த வழக்கின் சாட்சியாக கருதப்படும் அனுபவ் ரவி என்பவர் போலீசாரின் மேல் விசாரணைக்கு தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனு நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு
முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில், 'நீதிமன்ற அனுமதியின்றி மேல் விசாரணை நடத்தப்படுகிறது. இந்த விசாரணையை தொடர்ந்து நடத்திக்கொண்டே போனால் முடிவில்லாமல் தான் செல்லும்' என தெரிவிக்கப்பட்டது.மனுதாரர் தரப்பு வாதத்தை கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:மனுதாரரின் குற்றச்சாட்டில் முகாந்திரம் இருப்பதாக எங்களுக்கு தெரியவில்லை. கோடநாடு விவகாரம் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. எனவே இந்த வழக்கில் போலீசாரின் மேல் விசாரணைக்கு தடை விதிக்க முடியாது.இந்த கொலை, கொள்ளை விவகாரத்தில் உண்மை வெளிவர வேண்டும். எனவே மேல் விசாரணைக்கு தடை விதிக்க முடியாது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


ஐ.ஜி., ஆலோசனை



நீலகிரி மாவட்டம், கோத்தகிரி கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை ஊட்டி செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. போலீசாரின் கூடுதல் விசாரணையை தீவிரப்படுத்தும் வகையில், மேற்கு மண்டல ஐ.ஜி., சுதாகர் தலைமையில் நேற்று ஆலோசனை நடந்தது.டி.ஐ.ஜி., முத்துசாமி, நீலகிரி எஸ்.பி., ஆசிஷ்ராவத், ஏ.டி.எஸ்.பி., கிருஷ்ணமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர். 'விசாரணையை தீவிரப்படுத்தி குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்க வேண்டும்' என, உயர் போலீஸ் அதிகாரிகள் அறிவுறுத்தினர். இந்த வழக்கில் போலீசாரின் கூடுதல் விசாரணைக்கு, ஊட்டி செஷன்ஸ் நீதிமன்றம் நான்கு வாரம் காலம் அவகாசம் வழங்கியுள்ளது. கூடலுாரைச் சேர்ந்த சிலரிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.


மீண்டும் விசாரிக்க தனிப்படை




சேலம் மாவட்டம், இடைப்பாடி சமுத்திரம் காட்டுவளவைச் சேர்ந்தவர் கனகராஜ், 36. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலாவிடம் கார் டிரைவராக பணிபுரிந்தார். இவர், ஆத்துாரில் உள்ள உறவினர் வீட்டுக்கு, 2017 ஏப்., 28 இரவு சென்றபோது, கார் மோதி உயிரிழந்தார். கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில், முக்கிய குற்றவாளியான கனகராஜ் விபத்தில் இறந்தது பல சந்தேகங்களை எழுப்பியது. இதனால், இந்த வழக்கிலும் நான்கு ஆண்டுகளுக்கு பின், மீண்டும் மறு விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, கூடுதல் எஸ்.பி., தலைமையில், ஒரு டி.எஸ்.பி., - இன்ஸ்பெக்டர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

அவர்கள், ஆத்துார் புறவழிச்சாலையில் விபத்து நடந்த இடம், போலீஸ் ஸ்டேஷனில் பதிவு செய்த வழக்கு உள்ளிட்ட ஆவணங்களை ஆய்வு செய்து, மறுவிசாரணை நடத்த
திட்டமிட்டுள்ளனர். அத்துடன், கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கை விசாரிக்கும் தனிப்படை குழுவினரும், ஓரிரு நாளில் சேலம், ஆத்துாருக்கு வந்து விசாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகிஉள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (13+ 28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivas.... - Chennai,இந்தியா
08-செப்-202117:10:56 IST Report Abuse
Srinivas.... பீசப்பி கும்பல் இந்த கொள்ளையிலும் பங்குபோட்டுக் கொண்டிருக்கானே என்று ஊடகங்கள் தெரிவிப்பதை மக்கள் கவனித்துக் கொண்டுதான் உள்ளனர். இவனுங்களா ஊழலை, லஞ்சத்தை ஒழிக்க வந்தவனுங்க?
Rate this:
Cancel
Srinivas.... - Chennai,இந்தியா
08-செப்-202115:10:27 IST Report Abuse
Srinivas.... கூட்டமாக திட்டம்போட்டு கொலை,கொள்ளை செய்திருக்கானுங்க.
Rate this:
Cancel
08-செப்-202109:13:20 IST Report Abuse
அப்புசாமி விசாரணைக்கு காலக்கெடு விதிக்கணும். மூணுமாசத்தில் வழக்கை விசாரித்து முடிக்கா விட்டால் வழக்கைத் தள்ளுபடி செய்யணும். சின்னம்னாவோ, மாஜி முதல்வரோ விசாரணைக்கு ஆஜராகாவிட்டால் போலீஸ் காவலில் வெச்சு விசாரிக்கணும். இல்லேன்னா, அவிங்க சொத்துக்களை முடக்க வேண்டும். ஆனா, நமது உளுத்துப் போன சட்டங்களை வெச்சிக்கிட்டு ஒரு ஆணியும் புடுங்க முடியாது என்பது என் தனிப்பட்ட கருத்து.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X