சாத்தான்குளம் வழக்கு உச்ச நீதிமன்றம் தள்ளுபடி

Added : செப் 07, 2021
Share
Advertisement
புதுடில்லி:சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை - மகன், போலீஸ் காவலில் உயிரிழந்த வழக்கில், குற்றஞ் சாட்டப்பட்ட இரண்டு போலீசார் தாக்கல் செய்த 'ஜாமின்' மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.தமிழகத்தின் துாத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை - மகனான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர், போலீஸ் காவலில் கடந்த ஆண்டு ஜூனில் உயிரிழந்தனர். இந்த வழக்கு சி.பி.ஐ.,

புதுடில்லி:சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை - மகன், போலீஸ் காவலில் உயிரிழந்த வழக்கில், குற்றஞ் சாட்டப்பட்ட இரண்டு போலீசார் தாக்கல் செய்த 'ஜாமின்' மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தமிழகத்தின் துாத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை - மகனான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர், போலீஸ் காவலில் கடந்த ஆண்டு ஜூனில் உயிரிழந்தனர். இந்த வழக்கு சி.பி.ஐ., வசம் ஒப்படைக்கப்பட்டது. இதில் ஒன்பது போலீசார் மீது சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்தது.

குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சாத்தான்குளம் எஸ்.ஐ., ரகு கணேஷ் உள்ளிட்ட இரண்டு அதிகாரிகள், ஜாமின் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க ஏற்கனவே கோரிக்கை விடுக்கப்பட்டது.

அதை நீதிபதி வீனித் சரண் நிராகரித்தார். 'இந்த வழக்கில் நீங்கள் சில காலமாவது சிறையில் இருக்க வேண்டும்' என, தெரிவித்தார்.இந்நிலையில் நீதிபதிகள் வீனித் சரண், தினேஷ் மகேஸ்வரி அடங்கி அமர்வு முன் ஜாமின் மனு நேற்று விசாரணைக்கு வந்தது. 'வழக்கின் தற்போதைய நிலையில் ஜாமின் வழங்க முடியாது' என கூறிய நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X