அமைச்சர்களுக்கான அரசு பங்களாவில் தந்தை சிலை நிறுவிய சிராக் பாஸ்வான்

Added : செப் 07, 2021
Share
Advertisement
புதுடில்லி:டில்லியில் ரயில்வே அமைச்சருக்கு ஒதுக்கப்பட்ட அரசு பங்களாவில் வசிக்கும் லோக் ஜன்சக்தி கட்சி தலைவரும், எம்.பி.,யுமான சிராக் பாஸ்வான், அங்கு தன் தந்தை சிலையை நிறுவியது சர்ச்யையை ஏற்படுத்தி உள்ளது.'நோட்டீஸ்'லோக் ஜனசக்தி கட்சி தலைவராகவும், மத்திய அமைச்சராகவும் இருந்தவர் ராம்விலாஸ் பாஸ்வான். இவர் தன் குடும்பத்தினருடன், டில்லி ஜன்பத் சாலையில் உள்ள மத்திய
 அமைச்சர்களுக்கான அரசு பங்களாவில் தந்தை சிலை நிறுவிய சிராக் பாஸ்வான்

புதுடில்லி:டில்லியில் ரயில்வே அமைச்சருக்கு ஒதுக்கப்பட்ட அரசு பங்களாவில் வசிக்கும் லோக் ஜன்சக்தி கட்சி தலைவரும், எம்.பி.,யுமான சிராக் பாஸ்வான், அங்கு தன் தந்தை சிலையை நிறுவியது சர்ச்யையை ஏற்படுத்தி உள்ளது.

'நோட்டீஸ்'லோக் ஜனசக்தி கட்சி தலைவராகவும், மத்திய அமைச்சராகவும் இருந்தவர் ராம்விலாஸ் பாஸ்வான். இவர் தன் குடும்பத்தினருடன், டில்லி ஜன்பத் சாலையில் உள்ள மத்திய அமைச்சர்களின் குடியிருப்பில் 30 ஆண்டுகளாக வசித்து வந்தார்.

கடந்த ஆண்டு அவர் மரணம் அடைந்த நிலையில் கட்சி தலைமை பொறுப்பு அவரது மகன் சிராக் பாஸ்வான் வசம் வந்தது.லோக்சபா எம்.பி.,யான இவர், தன் தந்தை வசித்த பங்களாவை காலி செய்யாமல் அதையே கட்சியின் அதிகாரப்பூர்வ அலுவலகமாக பயன்படுத்த துவங்கினார்.இதற்கிடையே உட்கட்சி பூசலால் லோக் ஜன சக்தி கட்சி இரண்டாக உடைந்தது. கட்சிக்கு நானே தலைவர் என சிராக்கின் சித்தப்பா பசுபதி குமார் பரஸ் அறிவித்தார்.

அவருக்கு மத்திய அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டது. இந்நிலையில் ஏற்கனவே ராம்விலாஸ் பாஸ்வான் வசித்த பங்களா தற்போதைய ரயில்வே மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவிற்கு ஒதுக்கப்பட்டது.இதனால் வீட்டை காலி செய்யும்படி சிராக் பாஸ்வான் குடும்பத்தினருக்கு மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் 'நோட்டீஸ்' அனுப்பியது.


சர்ச்சை

இதுவரை வீட்டை காலி செய்யாத சிராக், அந்த வளாகத்தில் தன் தந்தையின் மார்பளவு சிலையை நிறுவியுள்ளார். இந்த நடவடிக்கை சர்ச்சையை உருவாக்கி உள்ளது.சிராக்கிற்கு நெருக்கமானவர்கள் கூறும்போது, 'தந்தையின் முதலாம் ஆண்டு நினைவு நாள் வரை அந்த வீட்டில் தங்கியிருக்க குடும்பத்தினர் விரும்புவதால், அதற்கான அனுமதியை அவர் மத்திய அரசிடம் கோருவார்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X