சத்தீஸ்கர் முதல்வரின் தந்தை கைது

Added : செப் 07, 2021
Share
Advertisement
ராய்ப்பூர்:பிராமணர்கள் குறித்து தரக்குறைவான கருத்துகளைத் தெரிவித்ததாக, சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேலின் தந்தை நந்த குமாரை, போலீசார் கைது செய்தனர்.சத்தீஸ்கரில் முதல்வர் பூபேஷ் பாகேல் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. முதல்வரின் தந்தை நந்த குமார் பாகேல், 86, உத்தர பிரதேசத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசும், 'வீடியோ' சமூக வலைதளங்களில் பரவியது.அதில், பிராமணர்கள்
 சத்தீஸ்கர் முதல்வரின் தந்தை கைது

ராய்ப்பூர்:பிராமணர்கள் குறித்து தரக்குறைவான கருத்துகளைத் தெரிவித்ததாக, சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேலின் தந்தை நந்த குமாரை, போலீசார் கைது செய்தனர்.

சத்தீஸ்கரில் முதல்வர் பூபேஷ் பாகேல் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. முதல்வரின் தந்தை நந்த குமார் பாகேல், 86, உத்தர பிரதேசத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசும், 'வீடியோ' சமூக வலைதளங்களில் பரவியது.அதில், பிராமணர்கள் குறித்து மிகவும் தரக்குறைவான கருத்துகளை அவர் தெரிவித்தார்.

இது குறித்து, பிராமண சங்கத்தினர் ராய்ப்பூர் போலீசில் புகார் அளித்தனர். நந்த குமார் பாகேல் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.இந்த சம்பவம் குறித்து முதல்வர் பூபேஷ் பாகேல் கூறுகையில், ''என் தந்தையின் பேச்சு மிகுந்த மன வேதனை அளிக்கிறது. யாரும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. போலீசார் தகுந்த நடவடிக்கை எடுப்பர்,'' என்றார்.இந்நிலையில், டில்லி சென்றிருந்த நந்த குமார் பாகேலை ராய்ப்பூர் போலீசார் நேற்று கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X