அரசியல் செய்தி

தமிழ்நாடு

பள்ளிகளில் சுழற்சி முறையில் கொரோனா பரிசோதனை

Added : செப் 07, 2021
Share
Advertisement
சென்னை:''அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சுழற்சி முறையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும்,'' என, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.சென்னை சைதாப்பேட்டை, ரெட்டிக்குப்பம் சாலையில் 13 லட்சம் ரூபாய் மதிப்பில் சாலையோர பூங்கா அமைக்கும் பணியை துவக்கி வைத்த பின், அவர் அளித்த பேட்டி: கடிதம்தமிழகத்தில் 44 சதவீதம்

சென்னை:''அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சுழற்சி முறையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும்,'' என, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை சைதாப்பேட்டை, ரெட்டிக்குப்பம் சாலையில் 13 லட்சம் ரூபாய் மதிப்பில் சாலையோர பூங்கா அமைக்கும் பணியை துவக்கி வைத்த பின், அவர் அளித்த பேட்டி:


கடிதம்



தமிழகத்தில் 44 சதவீதம் பேர் முதல் தவணை; 12 சதவீதம் பேர் இரண்டாவது தவணை தடுப்பூசி போட்டுள்ளனர். வரும் 12ம் தேதி ஒரே நாளில் 10 ஆயிரம் முகாம்கள் வாயிலாக, 20 லட்சம் தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த முயற்சிக்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும்.கேரள மாநில எல்லையை ஒட்டியுள்ள ஒன்பது மாவட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து, 100 சதவீதம் தடுப்பூசி என்ற இலக்கை எட்ட உள்ளோம்.

இதற்காக கூடுதல் தடுப்பூசி வேண்டி, மத்திய சுகாதாரத் துறை அமைச்சருக்கு கடிதம் எழுத உள்ளேன்.நடவடிக்கைஎந்தெந்த பள்ளிகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தொற்று கண்டறியப்பட்டதோ, அந்த பள்ளிகளுக்கு, 'சீல்' வைக்கப்படுகிறது. அங்கு சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அவர்களுக்கு மருத்துவ உதவிகள் செய்யப்படுகின்றன.

பள்ளிகளில் கொரோனா பாதிப்பு பெரிய அளவில் இல்லை. அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சுழற்சி முறையில், தொடர்ந்து கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும்.மேலும், 18 வயதுக்கு கீழானவர்களுக்கு தடுப்பூசி போடுவது தொடர்பாக, மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.

போலி மருத்துவத்தையும், போலி டாக்டர்களையும், போலி மருந்துகளையும் தமிழகத்தில் அனுமதிக்க முடியாது. சம்பந்தப்பட்டோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


மத்திய அமைச்சருக்கு கடிதம்



மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிற்கு, தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் எழுதியுள்ள கடிதம்: தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட, 6.06 கோடி பேருக்கு தடுப்பூசி போட வேண்டியுள்ளது. மாநிலம் முழுதும் 12ம் தேதி மெகா தடுப்பூசி முகாமை தமிழக அரசு நடத்துகிறது. எனவே, தமிழகத்திற்கு இந்த மாத ஒதுக்கீட்டான 1.04 கோடியை தவிர, கூடுதலாக ஒரு கோடி தடுப்பூசிகளை வழங்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X