எதிர்க்கட்சியினர் மீது பொய் வழக்கு: மத்திய அரசு மீது பவார் குற்றச்சாட்டு

Updated : செப் 07, 2021 | Added : செப் 07, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
புனே :''எதிர்க்கட்சியினர் மீது பொய் வழக்குகளை போட்டு அடக்க மத்திய பா.ஜ., அரசு முயற்சிக்கிறது,'' என, தேசியவாத காங்., தலைவர் சரத் பவார் குற்றம் சாட்டினார்.மஹாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான, சிவசேனா - தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள புனேவில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கூறியதாவது: மஹாராஷ்டிராவில் சிவசேனா
எதிர்க்கட்சியினர்,  பொய் வழக்கு, மத்திய அரசு,   பவார், குற்றச்சாட்டு

புனே :''எதிர்க்கட்சியினர் மீது பொய் வழக்குகளை போட்டு அடக்க மத்திய பா.ஜ., அரசு முயற்சிக்கிறது,'' என, தேசியவாத காங்., தலைவர் சரத் பவார் குற்றம் சாட்டினார்.

மஹாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான, சிவசேனா - தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள புனேவில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கூறியதாவது:


latest tamil news



மஹாராஷ்டிராவில் சிவசேனா தலைமையில் கூட்டணி ஆட்சி வெற்றிகரமாக நடப்பது மத்திய பா.ஜ., அரசுக்கு பிடிக்கவில்லை. ஆட்சியை எப்படியாவது கவிழ்க்க முயற்சிக்கிறது.
அதனால் தான் மஹாராஷ்டிராவைச் சேர்ந்த அரசியல் கட்சி தலைவர்கள் மீது அமலாக்கத்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இது மாநில அரசின் உரிமைகளை பறிக்கும் செயல் என்பதில் சந்தேகமில்லை. அமலாக்கத்துறையை பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை முடக்க மத்திய அரசு முயற்சிக்கிறது. இது வெற்றி பெறாது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vpurushothaman - Singapore,சிங்கப்பூர்
08-செப்-202113:10:59 IST Report Abuse
vpurushothaman இங்கேயும் பொய் வழக்குன்றாங்க ...அங்கேயும் பொய் வழக்குன்றாங்க . மொய் வழக்கு நடைபெறுகிறது. மெய்யாத்தான் சொல்றாங்களா ? ஒண்ணுமே புரியலே
Rate this:
Cancel
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
08-செப்-202110:33:41 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan வெட்கங்கெட்ட தலைவர். இங்கு திமுக அதைத்தானே செய்கிறது
Rate this:
Cancel
rajan -  ( Posted via: Dinamalar Android App )
08-செப்-202108:45:33 IST Report Abuse
 rajan உங்க உத்தமமான தாக்ரே மட்டும் என்ன நேர்மையான ஆட்சியா நடத்தறான் ரவுடிப் பய.ஜனநாயகமே இல்ல. அவை பற்றி எதிரகெ எழுதுபவர்களை தேடிப் பிடித்து கைது செய்து பொய் வழக்கு போட்டு சித்ரவத செய்றான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X