பொது செய்தி

தமிழ்நாடு

கலை கல்லூரிகளில் சேர்க்கை இடஒதுக்கீட்டை பின்பற்ற அறிவுறுத்தல்

Added : செப் 07, 2021
Share
Advertisement
சென்னை:'கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் காலியாக உள்ள இடங்களில், இட ஒதுக்கீட்டை பின்பற்றியே மாணவர்களை சேர்க்க வேண்டும்' என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.தமிழகத்தில் பிளஸ் 2 முடித்த மாணவ - மாணவியருக்கு, அரசு கலை அறிவியல் கல்லுாரிகளில் சேர்க்கை நடந்து வருகிறது. 143 அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளின் மாணவர் சேர்க்கைக்கு, 'ஆன்லைன்' வழியில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.இதில்,

சென்னை:'கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் காலியாக உள்ள இடங்களில், இட ஒதுக்கீட்டை பின்பற்றியே மாணவர்களை சேர்க்க வேண்டும்' என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பிளஸ் 2 முடித்த மாணவ - மாணவியருக்கு, அரசு கலை அறிவியல் கல்லுாரிகளில் சேர்க்கை நடந்து வருகிறது. 143 அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளின் மாணவர் சேர்க்கைக்கு, 'ஆன்லைன்' வழியில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

இதில், மூன்று லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர். அவர்களுக்கு மதிப்பெண் அடிப்படையில் தரவரிசை நிர்ணயிக்கப்பட்டு, அரசின் இட ஒதுக்கீட்டு அடிப்படையில், மாணவர்களை சேர்க்க அரசு உத்தரவிட்டது.

இதில் முதற்கட்டமாக, மாணவர் சேர்க்கை நடந்து முடிந்துள்ளது.இதை தொடர்ந்து, காலியாக உள்ள இடங்களிலும், இன்ஜினியரிங் மற்றும் மருத்துவம் உள்ளிட்டவற்றில் இடம் கிடைத்து வெளியேறும் மாணவர்களின் இடங்களிலும், அடுத்தடுத்த சுற்றுகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும். இந்த மாணவர் சேர்க்கை நடைமுறையை, 'வராண்டா சேர்க்கை' என்று அழைப்பர். அதாவது, காலி இடங்களில் சேர விரும்பும் மாணவர்கள், கல்லுாரிக்கு தினமும் வந்து காத்திருப்போருக்கு, கல்லுாரி முதல்வர்களே தன்னிச்சையாக இடங்கள் ஒதுக்குவர்.

இதில், பல்வேறு விதிமீறல்கள் நடக்க வாய்ப்புள்ளதாக, உயர் கல்வி துறைக்கு தகவல்கள் வந்துள்ளதால், இரண்டாம், மூன்றாம் கட்ட மாணவர் சேர்க்கைக்கும் கட்டுப்பாடுகள் விதிக்க பட்டு உள்ளன.ஒவ்வொரு கல்லுாரியிலும், கடைசி காலி இடம் வரை, தமிழக அரசின் இட ஒதுக்கீடு சட்டத்தை பின்பற்றியே, மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என, கல்லுாரி கல்வி இயக்குனரகம் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X