பொது செய்தி

தமிழ்நாடு

'ஆணழகன் போட்டி' ஏட்டுக்கு ரூ.1 லட்சம்

Added : செப் 07, 2021
Share
Advertisement
சென்னை:உலக ஆணழகன் போட்டியில் பங்கேற்க உள்ள, சென்னை போக்குவரத்து தலைமை காவலருக்கு, டி.ஜி.பி., சைலேந்திர பாபு, 1 லட்சம் ரூபாய் நிதியுதவி செய்தார்.சென்னை அடையாறு போக்குவரத்து காவல் நிலையத்தில், தலைமை காவலராக பணிபுரிபவர் புருஷோத்தமன், ௪௧. இவர், தொடர்ச்சியாக எட்டு ஆண்டுகள், ஆணழகன் போட்டியில், 'மிஸ்டர் தமிழ்நாடு' என்ற பட்டம் பெற்றுள்ளார்.காவல் துறையினருக்கான தேசிய அளவில்
 'ஆணழகன் போட்டி' ஏட்டுக்கு ரூ.1 லட்சம்

சென்னை:உலக ஆணழகன் போட்டியில் பங்கேற்க உள்ள, சென்னை போக்குவரத்து தலைமை காவலருக்கு, டி.ஜி.பி., சைலேந்திர பாபு, 1 லட்சம் ரூபாய் நிதியுதவி செய்தார்.

சென்னை அடையாறு போக்குவரத்து காவல் நிலையத்தில், தலைமை காவலராக பணிபுரிபவர் புருஷோத்தமன், ௪௧. இவர், தொடர்ச்சியாக எட்டு ஆண்டுகள், ஆணழகன் போட்டியில், 'மிஸ்டர் தமிழ்நாடு' என்ற பட்டம் பெற்றுள்ளார்.காவல் துறையினருக்கான தேசிய அளவில் நடந்த போட்டியில், வெள்ளிப் பதக்கம் பெற்றுள்ளார்.

இவர், அக்., 1 - 7 வரை, உஸ்பெகிஸ்தான் நாட்டில் தாஷ்கண்ட் என்ற இடத்தில் நடக்கவுள்ள, உலக ஆணழகன் போட்டியில் பங்கேற்க உள்ளார்.இப்போட்டிக்கு உடலை தயார் செய்ய மற்றும் பங்கேற்க, 3 லட்சம் ரூபாய் வரை தேவைப்படுவதாக கூறப்படுகிறது.

இதுகுறித்த தகவல்கள், 'பேஸ்புக்' உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவின. இதையடுத்து, சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், 75 ஆயிரம் ரூபாய் வழங்கி உதவி செய்தார். டி.ஜி.பி., சைலேந்திர பாபு, புருஷோத்தமனை அழைத்து, 1 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கி வாழ்த்தினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X