பொது செய்தி

தமிழ்நாடு

மீண்டும் விசாரிக்க தனிப்படை

Added : செப் 07, 2021
Share
Advertisement
சேலம் மாவட்டம், இடைப்பாடி சமுத்திரம் காட்டுவளவைச் சேர்ந்தவர் கனகராஜ், 36. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலாவிடம் கார் டிரைவராக பணி புரிந்தார். இவர், ஆத்துாரில் உள்ள உறவினர் வீட்டுக்கு, 2017 ஏப்., 28 இரவு சென்றபோது, கார் மோதி உயிரிழந்தார். கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில், முக்கிய குற்றவாளியான கனகராஜ் விபத்தில் இறந்தது பல சந்தேகங்களை எழுப்பியது. இதனால்,

சேலம் மாவட்டம், இடைப்பாடி சமுத்திரம் காட்டுவளவைச் சேர்ந்தவர் கனகராஜ், 36. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலாவிடம் கார் டிரைவராக பணி புரிந்தார். இவர், ஆத்துாரில் உள்ள உறவினர் வீட்டுக்கு, 2017 ஏப்., 28 இரவு சென்றபோது, கார் மோதி உயிரிழந்தார்.

கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில், முக்கிய குற்றவாளியான கனகராஜ் விபத்தில் இறந்தது பல சந்தேகங்களை எழுப்பியது. இதனால், இந்த வழக்கிலும் நான்கு ஆண்டுகளுக்கு பின், மீண்டும் மறு விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, கூடுதல் எஸ்.பி., தலைமையில், ஒரு டி.எஸ்.பி., - இன்ஸ்பெக்டர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

அவர்கள், ஆத்துார் புறவழிச்சாலையில் விபத்து நடந்த இடம், போலீஸ் ஸ்டேஷனில் பதிவு செய்த வழக்கு உள்ளிட்ட ஆவணங்களை ஆய்வு செய்து, மறுவிசாரணை நடத்த திட்டமிட்டு உள்ளனர். அத்துடன், கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கை விசாரிக்கும் தனிப் படை குழுவினரும், ஓரிரு நாளில் சேலம், ஆத்துாருக்கு வந்து விசாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகிஉள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X