அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஆறு இடங்களில் முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றம்

Added : செப் 07, 2021
Share
Advertisement
சட்டசபையில், சட்டத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதில் அளித்து, அமைச்சர் ரகுபதி வெளியிட்ட அறிவிப்புகள்:* சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில், 80 மாணவர்களுடன் புதிய அரசு சட்டக் கல்லுாரி அடுத்த கல்வியாண்டில் துவக்கப்படும்* திருச்சி, கோவை, திருநெல்வேலி, செங்கல்பட்டு, வேலுார் அரசு சட்ட கல்லுாரிகளில், 28 லட்சம் ரூபாய் மதிப்பில் உள்ளரங்கு விளையாட்டு திடல் மற்றும்

சட்டசபையில், சட்டத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதில் அளித்து, அமைச்சர் ரகுபதி வெளியிட்ட அறிவிப்புகள்:

* சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில், 80 மாணவர்களுடன் புதிய அரசு சட்டக் கல்லுாரி அடுத்த கல்வியாண்டில் துவக்கப்படும்

* திருச்சி, கோவை, திருநெல்வேலி, செங்கல்பட்டு, வேலுார் அரசு சட்ட கல்லுாரிகளில், 28 லட்சம் ரூபாய் மதிப்பில் உள்ளரங்கு விளையாட்டு திடல் மற்றும் உடற்பயிற்சி கூடம் நிறுவப்படும்

* முதுநிலை சட்டப் படிப்பில் இணையவெளி, சட்டம் மற்றும் நீதி ஆகிய இரண்டு பாடப்பிரிவுகள் 1.18 கோடி ரூபாய் செலவில் துவங்கப்படும்பெருங்குடியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலை வளாகத்தில், 2 கோடி ரூபாயில் சோலார் மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்படும்

* திருச்சி தேசிய சட்ட பல்கலையில், சட்டம் மற்றும் வேளாண்மைக்கான மையம், முதலீடுகளுக்கான சட்டங்கள் மையம் ஆகிய இரண்டு சட்ட ஆராய்ச்சி மையங்கள் நிறுவப்படும்


நீதித்துறை

*காஞ்சிபுரத்தில் தற்போது இயங்கி வரும் மாவட்ட நீதிமன்றம், முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றமாக மாற்றி அமைக்கப்படும்

* மயிலாடுதுறை மற்றும் திருப்பத்துாரில் தற்போது இயங்கி வரும் கூடுதல் மாவட்ட நீதிமன்றம், மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றமாக மாற்றி அமைக்கப்படும். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில், கூடுதல் மாவட்ட நீதிமன்றம் அமைக்கப்படும்

*கள்ளக்குறிச்சி, தென்காசி, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், மயிலாடுதுறை மற்றும் திருப்பத்துாரில், முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அமைக்கப்படும். புதுக்கோட்டை திருமயத்தில் சார்பு நீதிமன்றம் அமைக்கப்படும்

* சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில், வழக்கறிஞர்களுக்கான கூடுதல் வளாக கட்டடம், 4.28 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்படும்.


சிறைத்துறை



* அனைத்து மத்திய சிறைகள், பெண்கள் தனிச்சிறைகள், மாவட்ட சிறைகள், இளம் குற்றவாளிகள் சீர்திருத்தப் பள்ளி ஆகியவற்றுக்கு, 15 கன ரக சலவை இயந்திரங்கள் கொள்முதல் செய்யப்படும்

* அனைத்து மத்திய சிறைகளில் உள்ள பணியாளர் குடியிருப்புகளில், 500 லிட்டர் கொள்ளளவு உடைய குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும்

* சிறைகளை சீர்திருத்த மையங்களாக மாற்ற, விரிவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படும். இவ்வாறு, அமைச்சர் ரகுபதி அறிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X