பொது செய்தி

தமிழ்நாடு

'3டி' சேலையில் ஸ்டாலின் உருவம் பரமக்குடி நெசவாளர்கள் கைவண்ணம்

Added : செப் 07, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
பரமக்குடி :பரமக்குடி கைத்தறி நெசவாளர்கள், முதல்வர் ஸ்டாலின் உருவம் பொறித்த சேலையை, '3டி' தொழில்நுட்பத்தில் நெசவு செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி உதவி கைத்தறி இயக்குனர் அலுவலகத்தின் கீழ் 80க்கும் மேற்பட்ட நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் இயங்குகின்றன. கருணாநிதிஇங்கு தற்போது, 'எலக்ட்ரானிக் ஜக்கார்டு' பெட்டியின் உதவியுடன், முதல்வர் ஸ்டாலின்
 '3டி' சேலை, ஸ்டாலின் உருவம்  பரமக்குடி ,நெசவாளர்கள்

பரமக்குடி :பரமக்குடி கைத்தறி நெசவாளர்கள், முதல்வர் ஸ்டாலின் உருவம் பொறித்த சேலையை, '3டி' தொழில்நுட்பத்தில் நெசவு செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி உதவி கைத்தறி இயக்குனர் அலுவலகத்தின் கீழ் 80க்கும் மேற்பட்ட நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் இயங்குகின்றன.


கருணாநிதி



இங்கு தற்போது, 'எலக்ட்ரானிக் ஜக்கார்டு' பெட்டியின் உதவியுடன், முதல்வர் ஸ்டாலின் கையெழுத்திடுவது போன்ற உருவம், முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவம் பொறித்த சேலை நெசவு செய்யப்பட்டது. இதில், கருணாநிதியின் கண் கண்ணாடியை உற்று நோக்கினால் எந்த திசையில் திரும்பினாலும், பார்ப்பவரை நோக்கி நகரும் வகையில் 3டி தொழில்நுட்பத்தில் நெசவு செய்யப்பட்டுள்ளது.

இச்சேலையை, எமனேஸ்வரம் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கூட்டுறவு சங்க நெசவாளர் சரவணன், உதவியாளர் குபேந்திரன் ஆகியோர் நெய்துள்ளனர். இதற்கான 'கம்ப்யூட்டர் டிசைன்'களை சீனிவாசன் உருவாக்கியுள்ளார். 'ஒரு சேலையை உருவாக்க, 30 ஆயிரத்திற்கு மேல் செலவாகிறது. இதன் மதிப்பு, சேலைகளின் எண்ணிக்கையை பொறுத்து விலை குறைவாக கொடுக்க முடியும்' என்கின்றனர், நெசவாளர்கள்.


முதல்வருக்கு பரிசு



கைத்தறி உதவி இயக்குனர் சந்திரசேகரன் கூறுகையில், ''முதல்வர், கைத்தறி துணி ரகங்களை அரசு ஊழியர்கள், வாரத்தில் இரண்டு நாட்கள் உடுத்த வேண்டும் என கூறியுள்ளார்.''அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், முதல்வரின் உருவம் பொறித்த சேலை நெசவு செய்யப்பட்டு, முதல்வருக்கு பரிசு அளிக்கப்பட்டுள்ளது,'' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
09-செப்-202100:38:08 IST Report Abuse
Pugazh V ? சிறப்பு சிறப்பு.
Rate this:
Cancel
Mohan - Thanjavur ,இந்தியா
08-செப்-202123:10:19 IST Report Abuse
Mohan அவரு சும்மா இருந்தாலும், இவனுங்க விட மாட்டானுங்க போல இருக்கு.
Rate this:
Cancel
தமிழன் - Madurai,இந்தியா
08-செப்-202122:47:32 IST Report Abuse
தமிழன் அவங்க பொழப்பு அப்பிடி. என்ன பண்றது?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X