அரசியல் செய்தி

தமிழ்நாடு

15.33 லட்சம் வழக்குகள் தேக்கம்:அமைச்சர் ரகுபதி

Added : செப் 07, 2021
Share
Advertisement
''சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க அனைவரும் ஒன்றிணைந்து போராடுவோம்,'' என, சட்டத் துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.அவரது பதிலுரை:சமுதாய வளர்ச்சிக்கு ஏற்ப புதிய சட்டங்களை உருவாக்க வேண்டும். மக்கள் தொகை பெருக்கத்துக்கேற்ப புதிய நீதிமன்றங்களை உருவாக்க வேண்டும். கடந்த 2019 பதிலுரையில் பேசிய, அப்போதைய சட்டத் துறை அமைச்சர், 'சென்னை உயர்

''சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க அனைவரும் ஒன்றிணைந்து போராடுவோம்,'' என, சட்டத் துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.

அவரது பதிலுரை:

சமுதாய வளர்ச்சிக்கு ஏற்ப புதிய சட்டங்களை உருவாக்க வேண்டும். மக்கள் தொகை பெருக்கத்துக்கேற்ப புதிய நீதிமன்றங்களை உருவாக்க வேண்டும். கடந்த 2019 பதிலுரையில் பேசிய, அப்போதைய சட்டத் துறை அமைச்சர், 'சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக வர வேண்டும் என்ற கோரிக்கை, உச்ச நீதிமன்ற அமர்வு முன் வைக்கப்படும் என, மத்திய அரசால் உறுதி தரப்பட்டுள்ளது.விரைவில் கூடும் உச்ச நீதிமன்ற அமர்வில் நம் கோரிக்கை நிறைவேறும்' என்றார்.

அடுத்து, 2020 கொள்கை விளக்க குறிப்பில், '2012 அக்டோபரில் நடந்த, உச்ச நீதிமன்றக் கூட்டத்தில், தமிழ் வழக்காடு மொழியாக வர வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்படவில்லை. மீண்டும் மறு பரிசீலனை செய்யும்படி முதல்வர் வலியுறுத்தியுள்ளார்' என தெரிவிக்கப்பட்டது.

கடந்த 2012ல் கோரிக்கை ஏற்கப்படவில்லை என்பது தெரிந்தும், 2019ல் அந்த கோரிக்கை நிறைவேறும் எனக் கூறி, மக்களை நம்ப வைக்கும் உண்மைக்கு புறம்பான நடவடிக்கையை கடந்த அரசு செய்துள்ளது.எங்களை பொறுத்தவரை சொன்னதை செய்வோம்; செய்வதை சொல்வோம். நீங்களாக இருந்தாலும், நாங்களாக இருந்தாலும், சென்னை உயர் நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக தமிழ் வர வேண்டும் என்பது தமிழ் மக்களின் விருப்பம்.

உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், பீஹார், ராஜஸ்தான் மாநிலங்களின் உயர் நீதிமன்றங்களில், ஹிந்தி வழக்காடு மொழியாக உள்ளது. எனவே, தமிழ் வழக்காடு மொழியாக ஏன் இருக்கக் கூடாது என்பது தமிழக மக்களின் உணர்வு. நிச்சயமாக உச்ச நீதிமன்றத்தையும், மத்திய அரசையும் வலியுறுத்துவோம். தமிழை வழக்காடு மொழியாகக் கொண்டு வர அனைவரும் ஒன்றிணைந்து போராடுவோம்.

தமிழகத்தில் உள்ள நீதிமன்றங்களில் 15.33 லட்சம் வழக்குகள் தேக்கமடைந்துள்ளன. கடும் நிதி நெருக்கடியிலும், புதிய நீதிமன்றம் உருவாக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. புதிய மாவட்டங்களில், பல்வேறு அரசு அலுவலகங்கள் வந்தன. ஆனால், புதிய மாவட்ட நீதிமன்றம் வரவில்லை. நாங்கள் மூன்று புதிய மாவட்ட நீதிமன்றங்களை அறிவிக்க உள்ளோம். 280 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு அமைச்சர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X