அரசியல் செய்தி

தமிழ்நாடு

'ஜனாதிபதி நிராகரித்த காரணத்தை கேட்டது ஏன்?'

Added : செப் 07, 2021
Share
Advertisement
சட்டசபையில் நடந்த விவாதம்:அ.தி.மு.க., - தளவாய் சுந்தரம்: 'நீட்' தேர்வு ஜெயலலிதா, கருணாநிதி ஆட்சியில் வரவில்லை; பழனிசாமி ஆட்சியில் தான் வந்தது என, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அடிக்கடி கூறுகிறார்.பழனிசாமி கையெழுத்து போட்டு, நீட் தேர்வை இந்திய அளவில் கொண்டு வந்தாரா என ஆச்சரியமாக உள்ளது. இது, நீதிமன்றம் சம்பந்தப்பட்ட பிரச்னை.அமைச்சர் சுப்பிரமணியன்: நீட் தேர்வை

சட்டசபையில் நடந்த விவாதம்:

அ.தி.மு.க., - தளவாய் சுந்தரம்:

'நீட்' தேர்வு ஜெயலலிதா, கருணாநிதி ஆட்சியில் வரவில்லை; பழனிசாமி ஆட்சியில் தான் வந்தது என, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அடிக்கடி கூறுகிறார்.பழனிசாமி கையெழுத்து போட்டு, நீட் தேர்வை இந்திய அளவில் கொண்டு வந்தாரா என ஆச்சரியமாக உள்ளது. இது, நீதிமன்றம் சம்பந்தப்பட்ட பிரச்னை.

அமைச்சர் சுப்பிரமணியன்:

நீட் தேர்வை எதிர்த்து, சட்டசபையில் நிறைவேற்றிய தீர்மானம், மத்திய உள்துறை அமைச்சகத்தால் திருப்பி அனுப்பப்பட்டது. இது குறித்து சட்டசபையில் எப்போதாவது தெரிவிக்கப்பட்டதா; ஜனாதிபதி நிராகரித்து அனுப்பிய தகவல், எம்.எல்.ஏ.,க்களுக்கு தெரிவிக்கப்பட்டதா;ஜனாதிபதி நிராகரித்தால், அது தொடர்பாக எந்த விளக்கமும் கேட்க முடியாது. இது தெரிந்தும், அதற்கான காரணத்தை கேட்டு, மத்திய அரசுக்கு கடிதம் எழுதி காலத்தை கடத்தியுள்ளீர்கள்.

தளவாய் சுந்தரம்:

மாநில அரசின் சட்டம், மத்திய அரசுக்கு எதிராக இருந்தால், ஜனாதிபதி அதை நிராகரிக்கத் தான் செய்வார்.

அமைச்சர் சுப்பிரமணியன்:

இது தெரிந்த பின், இன்னொரு கடிதம் எழுதியது காலம் கடத்திய செயலா; இல்லையா?

தளவாய் சுந்தரம்:

இது, 'சென்சிடிவ் சப்ஜெக்ட்'. நீட் பிரச்னையில் நாங்கள் அரசிற்கு ஆதரவாகவே உள்ளோம். அமைச்சர் ஒவ்வொரு முறை இது குறித்து பேசும் போதும், முன்னாள் முதல்வர் தேர்வை கொண்டு வந்தார் என கூறுகிறார். இதற்காக, நாங்கள் எத்தனை கோர்ட்டிற்கு அலைந்தோம் என உங்களுக்கு தெரியுமா?

அமைச்சர் சுப்பிரமணியன்:

சட்டத்தை இயற்றி அனுப்பி விட்டு, எம்.எல்.ஏ.,க்கள் - எம்.பி.,க்களை அழைத்து சென்று, ஜனாதிபதியை சந்தித்து வலியுறுத்தியது உண்டா?

எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி:

நான் மூன்று முறை பிரதமரை சந்தித்து, இது தொடர்பாக கோரிக்கை வைத்தேன். இது ஒட்டுமொத்த தமிழக மக்கள், அரசியல் கட்சிகளின் கோரிக்கை எனக் கூறினேன்.சபாநாயகர்: நீட் குறித்து நிறைய விவாதித்து விட்டோம். மற்ற பிரச்னைகள் குறித்து பேசுங்கள்.இவ்வாறு விவாதம் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X