பொது செய்தி

தமிழ்நாடு

'தினமலர்' நாளிதழுக்கு தலைவர்கள் வாழ்த்து

Added : செப் 07, 2021
Share
Advertisement
சென்னை:தேசிய தமிழ் நாளிதழான, 'தினமலர்' 70 ஆண்டுகளை நிறைவு செய்து, நேற்று முன்தினம், 71வது ஆண்டில் அடியெடுத்து வைத்துஉள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.முன்னாள் முதல்வரும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான பழனிசாமி: 71வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும், தினமலர் நிறுவனம், மக்களுக்கு நடுநிலை செய்திகளை வழங்கி, நுாற்றாண்டு விழா காண

சென்னை:தேசிய தமிழ் நாளிதழான, 'தினமலர்' 70 ஆண்டுகளை நிறைவு செய்து, நேற்று முன்தினம், 71வது ஆண்டில் அடியெடுத்து வைத்துஉள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.முன்னாள் முதல்வரும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான

பழனிசாமி:

71வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும், தினமலர் நிறுவனம், மக்களுக்கு நடுநிலை செய்திகளை வழங்கி, நுாற்றாண்டு விழா காண வாழ்த்துகள்.

சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமி:

இன்றைய கன்னியாகுமரி மாவட்டத்தை, தமிழகத்தோடு இணைக்க நடந்த போராட்டத்தில், தமிழர்களின் போர் வாள் தான், தினமலர் என்பது இன்றைய தலைமுறைக்கு தெரிந்திருக்க வாய்ப்புகள் குறைவு.ஆட்சியாளர்களின் அடக்குமுறைகளுக்கும், அதிகார துஷ்பிரயோகத்துக்கும் அடிபணியாமல், மக்களின் நியாயமான கோரிக்கைகளை உரத்த குரலில் எதிரொலித்த காரணத்தால், இத்தனை ஆண்டுகளில் எந்த ஆட்சியின் அத்துமீறலும், இந்த மலர் மீது சிறு சலனத்தையும் ஏற்படுத்த இயலவில்லை.

இந்தியாவின் முதன்மை மாநிலமாக தமிழகம் முன்னேற, கல்வியும், தொழிலும் சிறந்தோங்க பாடுபடுவதே லட்சியமாக கொண்டு செயல்படும் தினமலர் இதழ், தொடர்ந்து மக்கள் சேவையில் ஈடுபடவேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

கல்வி வளர்ச்சிக்கு, தினமலர் நாளிதழின் தொண்டு அளப்பரியது. மாவட்டம் தோறும் ஒவ்வொரு ஆண்டும், 'ஜெயித்துக் காட்டுவோம்' என்ற நிகழ்ச்சியை நடத்தி, 10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற தொடர்ந்து பணியாற்றி வருகிறது. அதுமட்டுமின்றி, கல்லுாரிகளில் எந்த படிப்பை தேர்வு செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்ய, 'வழிகாட்டி' நிகழ்ச்சிகள் நடந்தப்பட்டு வருகின்றன.

எந்தவித லாப நோக்கமும் இன்றி, மாணவர்களின் கல்வி அறிவை பெருக்க, இது போன்ற நிகழ்ச்சிகள், தினமலர் இதழின் மகுடம் என்றால் மிகையல்ல. தினமலர் இதழுக்கும், அதை வழி நடத்திச் செல்லும் நிர்வாகிகளுக்கும் வாழ்த்துகள்.

புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி:

ஜனநாயகத்தின் முக்கிய அம்சமே பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்துரிமை. கருத்துரிமையை நிலை நாட்டுவது பத்திரிகைகள். ஒரு நாளிதழை இடைவிடாமல், 70 ஆண்டுகள் நடத்துவது எளிதல்ல.வாசகர்களுக்கு எது தேவை என்று கருதி, அதை தருவது, தினமலர் நாளிதழின் பாணி.

வணிக நோக்கத்தோடு விற்பனையை குறிக்கோளாக கொண்டு, ஆபாசங்களையும், அருவருப்புகளையும், வன்முறைகளையும் துாண்டும் செய்திகள், தினமலர் இதழில் வந்ததாக யாரும் சொல்ல முடியாது.தினமலர் செய்தியை பார்த்து, கோபப்படாத அரசியல்வாதியே இருக்க முடியாது. மகிழ்ச்சியுறாத அரசியல்வாதியும் இருக்க முடியாது. ஜனநாயக கடமையில் இருந்து இம்மி அளவும் பிசகாமல், நடுநிலையோடு செயல்படும் ஒரே நாளிதழ் தினமலர்.

மக்கள் பிரச்னைகளை மத்திய - மாநில அரசுகளின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையிலும், தேசப்பற்றை வளர்க்கும் வகையிலும், 70 ஆண்டுகளாக செயல்படுவதை போல, 100 ஆண்டுகள் கடந்து, ஆயிரமாயிரம் காலம் தமிழக மக்களின் உள்ளங்களிலும், இல்லங்களிலும் தினமலர் மலர வாழ்த்துகிறேன்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X