கோர்ட் செய்தி

தமிழ்நாடு

'பாடப் புத்தகங்களில் முதல்வரின் புகைப்படத்தை பயன்படுத்தாதீங்க!'

Added : செப் 07, 2021
Share
Advertisement
சென்னை:அரசியல் தலைவர்களின் விளம்பரத்துக்காக, அரசு நிதி பயன்படுத்தப்படாமல் இருக்க கூடுதல் கவனம் எடுக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.உயர் நீதிமன்றத்தில், 'நமது திராவிடர் இயக்கம்' கட்சியின் தலைவர் ஓவியம் ரஞ்சன் என்பவர் தாக்கல் செய்த மனு:மறைந்த முதல்வர் ஜெயலலிதா, முன்னாள் முதல்வர் பழனிசாமி புகைப்படங்கள் அச்சிடப்பட்ட பாடப்

சென்னை:அரசியல் தலைவர்களின் விளம்பரத்துக்காக, அரசு நிதி பயன்படுத்தப்படாமல் இருக்க கூடுதல் கவனம் எடுக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உயர் நீதிமன்றத்தில், 'நமது திராவிடர் இயக்கம்' கட்சியின் தலைவர் ஓவியம் ரஞ்சன் என்பவர் தாக்கல் செய்த மனு:மறைந்த முதல்வர் ஜெயலலிதா, முன்னாள் முதல்வர் பழனிசாமி புகைப்படங்கள் அச்சிடப்பட்ட பாடப் புத்தகங்கள், எழுது பொருட்களை, அரசு பள்ளி மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் பயன்படுத்த வேண்டாம் என்று, கல்வித்துறை வாய்மொழி உத்தரவு பிறப்பித்திருப்பதாக அறிகிறேன்.

ஏற்கனவே அச்சிடப்பட்ட பாடப் புத்தகங்கள், நோட்டுகள், பைகளையும் வீணாக்கக் கூடாது. எதிர்காலத்தில், அரசு பள்ளிகளில் வழங்கப்படும் பாடப்புத்தகங்கள், எழுது பொருட்கள், பைகளில், அரசியல் தலைவர்களின் புகைப்படங்களை அச்சிட தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் ஞானசேகர் ஆஜரானார்.அரசு தரப்பில், அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம் ஆஜராகி, ''முன்னாள் முதல்வர்கள் புகைப்படம் அச்சிடப்பட்ட, 64 லட்சம் புத்தக பை மற்றும், 10 லட்சம் எழுது பொருட்களை பயன்படுத்திக் கொள்ள முதல்வர் அனுமதி வழங்கியிருப்பதாக, சட்டசபையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்,'' என்றார்.

முதல் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு:பாடப்புத்தகம், பை, பள்ளி செல்லும் குழந்தைகளுக்கானது. ஓட்டுரிமை இல்லாத குழந்தைகளுக்கு வழங்கப்படும் பொருட்களில், அரசியல் தலைவர்களின் புகைப்படங்கள் இடம் பெறுகின்றன; அவர், முதல்வராக இருந்தாலும் சரி.அரசியல்வாதிகளின் தனிப்பட்ட நலனுக்காக, அவர்களின் புகைப்படங்களை அச்சிட, பொது மக்கள் நிதியை தவறாக பயன்படுத்த முடியாது. இத்தகைய நடைமுறை எதிர்காலத்தில் தொடராமல் இருப்பதை, அரசு உறுதி செய்ய வேண்டும்.

முதல்வரும், தன் புகைப்படம் இடம் பெறுவதை விரும்பவில்லை என்று, அட்வகேட் ஜெனரல் தெரிவித்தார். எனவே, இந்த வழக்கில் மேற்கொண்டு உத்தரவு தேவையில்லை. விளம்பர பலகை மற்றும் இதர பொருட்களில், அரசியல் தலைவர்களின் விளம்பரத்துக்காக, பொது மக்கள் பணத்தை செலவழிக்கக் கூடாது என்பதை உறுதி செய்யும் விதமாக, அரசு கூடுதல் கவனத்துடன் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

முதல்வரின் புகைப்படம், பத்திரிகைகளில் வெளியிடப்படும் விளம்பரங்களில் அல்லது சில விளம்பர பலகைகளில் இடம் பெறலாம்; ஆனால், பாடப் புத்தகங்கள் உள்ளிட்ட கல்வி சம்பந்தப்பட்ட பொருட்களில் இடம் பெறக் கூடாது.இவ்வாறு முதல் பெஞ்ச் உத்தரவிட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X