அரசியல் செய்தி

தமிழ்நாடு

மொட்டை அடிக்கும் பணியாளர்களுக்கு ரூ.5,000

Added : செப் 07, 2021
Share
Advertisement
கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது நடந்த விவாதம்:தி.மு.க., - நந்தகுமார்: 'மொட்டைக்கு இனி இல்லை கட்டணம்' என்ற அற்புதமான திட்டம் முதல்வரின் திட்டம். இது, பக்தர்களிடமும், பொது மக்களிடமும், நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஏற்கனவே, கோவில்களில் பணிபுரிந்து கொண்டிருந்த மொட்டை அடிக்கும் பணியாளர்களின், வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.இலவசம் என்பதால், அவர்களின்

கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது நடந்த விவாதம்:

தி.மு.க., - நந்தகுமார்:

'மொட்டைக்கு இனி இல்லை கட்டணம்' என்ற அற்புதமான திட்டம் முதல்வரின் திட்டம். இது, பக்தர்களிடமும், பொது மக்களிடமும், நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஏற்கனவே, கோவில்களில் பணிபுரிந்து கொண்டிருந்த மொட்டை அடிக்கும் பணியாளர்களின், வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

இலவசம் என்பதால், அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பது உண்மையா? அப்படி பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு உதவி செய்யப்படுமா?

அமைச்சர் சேகர்பாபு:

'மொட்டைக்கு இனி இல்லை கட்டணம்' என்ற திட்டம் அறிவிக்கப்பட்ட பின், பக்த கோடிகள் நெஞ்சம் எல்லாம் பூத்து குலுங்குகிறது. இதையும் ஒரு சில கட்சிகள் விமர்சனம் செய்கின்றன. மொட்டை அடிக்க பல இடங்களில் 500 ரூபாய், 1,000 ரூபாய் கேட்கும் நிலை உள்ளது. இதை அறிந்த முதல்வர், மொட்டைக்கு இனி இல்லை கட்டணம் என்ற அறிவிப்பை வெளியிட செய்தார். மொட்டை அடிப்பவர்களுக்கு பணி நிரந்தரம் எதுவும் இல்லை. அவர்களுக்கு கோவில் சார்பில், எந்தவிதமான ஊதியமும் வழங்கப்படுவதில்லை.

ஐந்து ரூபாய் முதல் 25 ரூபாய் வரை ரசீது பெற்று, அதை கோவில்களில் கொடுத்து பணமாக பெறுவது வழக்கம்.பல கோவில்களில், அவர்களுக்கு போதிய வருமானம் இல்லாததால், யார் மொட்டை அடித்தாலும் மொட்டை அடிக்க கட்டணமாக 30 ரூபாய் கோவில் சார்பில் செலுத்தப்படுகிறது.'இது போதாது. இதற்கு முன் இனாமாக, 5 ரூபாய், 10 ரூபாய் வாங்குவோம். அதுவும் தற்போது தடைபட்டுள்ளது' என்றனர்.

இது குறித்து, முதல்வருடன் கலந்தாலோசித்தோம். அதைத் தொடர்ந்து, 1,749 மொட்டை போடும் பணியாளர்களுக்கு மாதம் 5,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X