பொது செய்தி

தமிழ்நாடு

ஊரக உள்ளாட்சி தேர்தல் 13ம் தேதி அறிவிப்பு

Updated : செப் 09, 2021 | Added : செப் 07, 2021 | கருத்துகள் (2+ 2)
Share
Advertisement
சென்னை : ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ள ஒன்பது மாவட்டங்களுக்கு, முன்னுரிமை அடிப்படையில் கொரோனா தடுப்பூசி வழங்கும்படி, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம், தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்து உள்ளது. அதே நேரத்தில், ஊரக உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்பு ௧௩ம் தேதி வெளியாகும் என, அமைச்சர் அன்பரசன் தெரிவித்தார். காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி,
ஊரக உள்ளாட்சி தேர்தல் 13ம் தேதி அறிவிப்பு

சென்னை : ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ள ஒன்பது மாவட்டங்களுக்கு, முன்னுரிமை அடிப்படையில் கொரோனா தடுப்பூசி வழங்கும்படி, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம், தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்து உள்ளது. அதே நேரத்தில், ஊரக உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்பு ௧௩ம் தேதி வெளியாகும் என, அமைச்சர் அன்பரசன் தெரிவித்தார்.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார், திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.இம்மாவட்டங்களில் பின்பற்ற வேண்டிய கொரோனா தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம், மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் தலைமை வகித்தார்.
கூட்டத்தில், உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ள மாவட்டங்களில், கொரோனா தொற்று தொடர்பாக மாவட்ட அளவில் மேற்கொள்ள வேண்டிய அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், வாக்காளர்கள் மற்றும் தேர்தல் பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய தடுப்பு உபகரணங்களின் கொள்முதல் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

மேலும், ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்கும் ஒன்பது மாவட்டங்களுக்கு, முன்னுரிமை அடிப்படையில் கொரோனா தடுப்பூசி வழங்கும்படி, மாநில தேர்தல் ஆணையம் சார்பில் அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. கூட்டத்தில் பங்கேற்ற, மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர் ராதாகிருஷ்ணன், ''கொரோனா தொற்று தொடர்பாக, தேவையான அனைத்து தடுப்பு நடவடிக்கைகளும் தங்கள் துறையில் எடுக்கப்படும்,'' என உறுதி அளித்தார். மாநில தேர்தல் ஆணைய செயலர் சுந்தரவல்லி, தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழக மேலாண்மை இயக்குனர் தீபக் ஜேக்கப் மற்றும் அதிகாரிகளும் கூட்டத்தில் பங்கேற்றனர்.இதற்கிடையில், சென்னை பல்லாவரம் தொகுதி எம்.எல்.ஏ., கருணாநிதியின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், 20 லட்சம் ரூபாய் செலவில், பம்மலை அடுத்த பொழிச்சலுாரில் கட்டப்பட்ட பஸ் நிறுத்தம் துவக்க விழா நேற்று முன்தினம் நடந்தது.

ஊரக தொழில் துறை அமைச்சர் அன்பரசன், பஸ் நிறுத்தத்தை திறந்து வைத்து பேசுகையில், ''உள்ளாட்சி தேர்தல், வரும் 13ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. ''தேர்தல் அறிவித்த உடன், ஊராட்சி தலைவர், ஒன்றிய குழு உறுப்பினர், மாவட்ட குழு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு தி.மு.க., சார்பில் போட்டியிடுபவர்களை வெற்றி பெற வைக்க வேண்டியது ஒவ்வொருவரின் பொறுப்பு,'' என்றார்.மாற்று வாக்காளர் அட்டை

இலவசமாக தர நடவடிக்கைவாக்காளர்களுக்கு, மாற்று வாக்காளர் அடையாள அட்டைகளை இலவசமாக வழங்க, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.இந்திய தேர்தல் கமிஷன் அனைத்து வாக்காளர்களுக்கும், மாற்று வாக்காளர் புகைப்பட அடையாள அட்டைகளை இலவசமாக வழங்கும்படி அனைத்து மாநிலங்களையும் அறிவுறுத்தி உள்ளது.

அதை ஏற்று, தமிழக தலைமை தேர்தல் கமிஷனர் அலுவலகம், தமிழகத்தில் உள்ள 342 அரசு 'இ - சேவை' மையங்களிலும், மாற்று வாக்காளர் அடையாள அட்டை தேவைப்படும் வாக்காளர்களுக்கு இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளது. இத்திட்டம் அக்.,1 முதல் நடைமுறைக்கு வரும். இச்சேவையை அனைத்து வாக்காளர்களும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.


Advertisement
வாசகர் கருத்து (2+ 2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sriram V - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
08-செப்-202117:38:55 IST Report Abuse
Sriram V You said people assembling in public places for ganesh pooja will spread corona. What about conducting panchayat polls? Whether it will not spread the virus?
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
08-செப்-202112:24:48 IST Report Abuse
duruvasar அப்போ எல்லாம் ரெடி பண்ணியாச்சினு சொல்லுங்க‌. யாராவது ஒரு பாசக்கார பாரதி கேஸ் போட்டு ஸ்டே வாங்காம இருக்கவேண்டும். கொராணா காலத்தில் தேர்தல். கூடடாது என்ற தலப்பில் ஒரு காரசாரமான விவாதத்தை மூத்த பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்களை வைத்து காட்சி ஊடகங்களில் நடத்துங்கள். முன்களபணியாளர்களை வைத்து தேர்தல் வேண்டாம் என்ற மக்களின் ஒருமித்த கருத்தை மையப்படுத்தி ஆய்வு கட்டுரைகளை பத்திரிக்கைகளில் வெளியிட சொல்லுங்கள். இந்த ஒரு கோடு போதும். 200 ரூபாய் பயணாளிகள் சமூக ஊடகங்களில் 16 வழி ரோடு போட்டுவிடுவார்கள். ஜனநாயகத்தையும், சமூகநீதியையும் காக்க தேர்தல் ஒன்றுதான் வழி என்று முதல்வர் சட்டசபையில் உரையாற்றினால் போதும் மற்ற எல்லாவற்றையும் ஸ்கெட்ச் போட்டு கச்சிதமாக செயல்வீரர்கள் சோலிய முடித்துவிடுவார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X