அரசியல் செய்தி

தமிழ்நாடு

சுதந்திர போராட்ட வீரர்களுக்கு சிலை பத்திரிகையாளர்களுக்கு நல வாரியம்

Added : செப் 07, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
''சுதந்திரப் போராட்ட வீரர்கள் உட்பட பத்து பேருக்கு 1 கோடி ரூபாயில், வெவ்வேறு இடங்களில் சிலைகள் அமைக்கப்படும்,'' என, செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் அறிவித்தார்.அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:* சென்னை கிண்டி காந்தி மண்டப வளாகத்தில், வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்கள் ஆகியோருக்கு சிலை அமைக்கப்படும். கடலுாரில் சுதந்திர போராட்ட வீராங்கனை அஞ்சலை
 சுதந்திர போராட்ட வீரர்களுக்கு சிலை  பத்திரிகையாளர்களுக்கு நல வாரியம்

''சுதந்திரப் போராட்ட வீரர்கள் உட்பட பத்து பேருக்கு 1 கோடி ரூபாயில், வெவ்வேறு இடங்களில் சிலைகள் அமைக்கப்படும்,'' என, செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் அறிவித்தார்.

அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:

* சென்னை கிண்டி காந்தி மண்டப வளாகத்தில், வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்கள் ஆகியோருக்கு சிலை அமைக்கப்படும்.

கடலுாரில் சுதந்திர போராட்ட வீராங்கனை அஞ்சலை அம்மாள். அரியலுார் மாவட்டம் கீழ்பழுவூரில், மொழிப்போர் தியாகி சின்னசாமி; சென்னை அண்ணா பல்கலை வளாகத்தில், மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம். சென்னை ராணிமேரி கல்லுாரியில் ரவீந்திரநாத் தாகூர்; சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகையில், முன்னாள் அமைச்சர் நெடுஞ்செழியன்; மயிலாடுதுறையில், மூவலுார் ராமாமிர்தம்; புதுக்கோட்டையில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையார், ராணிப்பேட்டை மாவட்டத்தில், தமிழறிஞர் மு.வரதராசனார் ஆகியோருக்கு சிலை அமைக்கப்படும். இதற்கு 1 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும்

* நாட்டின் 75வது சுதந்திர தின விழாவையொட்டி, துாத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சியில் அமைந்துள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டையில், ஒலி - ஒளிக்காட்சி அமைக்கப்படும். சுதந்திரப் போராட்ட தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துரைக்கும் குறும்படங்கள் தயாரிக்கவும், நினைவு மண்டபங்களை புதுப்பிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்

* சென்னை காந்தி மண்டபவளாகத்தில் உள்ள தியாக சீலர்களின் நினைவு மண்டபங்கள் 3.38 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும்
* திருப்பூர் மாவட்டத்தில், சுதந்திரப் போராட்ட வீரர் மலையாண்டி வெங்கிடபதி எத்தலப்பர் நாயக்கருக்கு, சிலை மற்றும் அரங்கம் அமைக்க 2.60 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்

*பொள்ளாச்சியில் உள்ள நீர்வளத் துறையின் தலைமை பொறியாளர்அலுவலக வளாகத்திற்கு, மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர்,'சி.சுப்பிரமணியம் வளாகம்' என பெயர் சூட்டப்படும். இவ்வளாகத்தில் 6 கோடி ரூபாய் மதிப்பில், இரண்டு அடுக்குகள் கொண்ட புதிய அரங்கு கட்டமைப்படும். இதற்கு, 'வி.கே.பழனிசாமி அரங்கம்' என பெயர் சூட்டப்படும். மேல்தளத்தில் அமைக்கப்படும் அரங்கிற்கு, 'பொள்ளாச்சி நா.மகாலிங்கம்' பெயர் சூட்டப்படும்.

பரம்பிக்குளம் - ஆழியாறு பாசனத் திட்டத்தை, பிரதமர் நேரு 1961 அக்., 7ல் துவக்கி வைத்தார். அந்நாளை, 'பரம்பிக்குளம் - ஆழியாறு பாசனத்திட்ட தினம்' என அறிவித்து, அங்குள்ள தலைவர்களின் சிலைகளுக்கு, அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும்

* மறைந்த முன்னாள் முதல்வர் சுப்பராயனுக்கு, சென்னையில் முழு உருவ சிலையும், நாமக்கல் நகரில் அரங்கமும் அமைக்கப்படும்

* ஈரோடு மாவட்டத்தில், கீழ்பவானி பாசன திட்டம் உருவாக காரணமாக இருந்த, தியாகி ஈஸ்வரனுக்கு சிலை மற்றும் அரங்கம் அமைக்க 2.60 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்

* மறைந்த தலைவர் கோவிந்தசாமிக்கு, விழுப்புரம் மாவட்டத்தில் சிலை மற்றும் அரங்கம் அமைக்கப்படும்

* பத்திரிகையாளர்கள் நலன் காக்கும் வகையில், பத்திரிகையாளர்கள் நல வாரியம் அமைக்கப்படும். பணிக்காலத்தில் இயற்கை எய்தும் பத்திரிகையாளர்களுக்கு, முதல்வரின் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் 3 லட்சம் ரூபாயானது 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும்

* பத்திரிகையாளர்களுக்கு மாவட்ட அளவில், மாநில அளவில் பயிற்சிகள் வழங்கப்படும். இளம் பத்திரிகையாளர்கள் உயர் கல்வி படிக்க அரசு நிதியுதவி வழங்கப்படும்

* ஆண்டுதோறும் ஒரு சிறந்த இதழியலாளருக்கு, 'கலைஞர் எழுதுகோல் விருது' 5 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்

* அரசின் செயல்பாடுகள் மற்றும் திட்டங்களை, பொது மக்கள் அறிந்து பயன்பெறும் வகையில், சமூக ஊடகப்பிரிவுஎன்ற தனிப்பிரிவு உருவாக்கப்படும்

* அரசு எம்.ஜி.ஆர்., திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில், கூட்ட அரங்கம் அமைத்தல், உட்கட்டமைப்பு வசதிகள் 1.58 கோடி ரூபாயில் செய்யப்படும்.இவ்வாறு அமைச்சர் அறிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
seshadri - chennai,இந்தியா
08-செப்-202116:40:58 IST Report Abuse
seshadri கிடக்கிறது கிடக்கட்டும் கிழவியை தூக்கி மனையில் வை என்ற கதையாக இருக்கிற எரிகிற பிரச்சினைகளை விட்டு விட்டு சிலை வைக்க கிளம்பி விட்டார்கள்.
Rate this:
Cancel
vpurushothaman - Singapore,சிங்கப்பூர்
08-செப்-202113:22:45 IST Report Abuse
vpurushothaman சிலை மழை பொழிந்த தளபதிக்கு ஆயிரம் அடி உயரத்தில் சிலை அமைக்கலாம். ஆனால் அதில் ஒரு சிக்கல் - எங்கே அமைப்பது ? கோபாலபுரத்திலா ? அறிவாலயத்திலா ? அன்பகத்திலா ? அண்ணா சாலையிலா ? ஆஹா கடற்கரையில் இன்னும் கொஞ்சம் இடம் பாக்கி இருக்கிறதே ?
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
08-செப்-202110:36:00 IST Report Abuse
vbs manian ore saathanai. silaigal mani mandapam. yaarukum ப யனில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X