விதை பரிசோதனை மையம் இடம் தேர்வு தீவிரம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விதை பரிசோதனை மையம் இடம் தேர்வு தீவிரம்

Added : செப் 07, 2021
Share
திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில், புதிய விதை பரிசோதனை நிலையம் அமைப்பதற்காக, இடம் தேர்வு செய்யும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களுக்கு தேவையான, 70 சதவீத விதைநெல், திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் தயார் செய்யப்படுகிறது. தரமான விதை நெல் என்பதால், விவசாயிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைக்கிறது.திருப்பூர் மாவட்டத்தில், விதை பரிசோதனை

திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில், புதிய விதை பரிசோதனை நிலையம் அமைப்பதற்காக, இடம் தேர்வு செய்யும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களுக்கு தேவையான, 70 சதவீத விதைநெல், திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் தயார் செய்யப்படுகிறது. தரமான விதை நெல் என்பதால், விவசாயிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைக்கிறது.திருப்பூர் மாவட்டத்தில், விதை பரிசோதனை நிலையம் இல்லாததால், பயிர்சாகுபடிக்கான விதை உற்பத்தியில் தாமதம் ஏற்பட்டது. தமிழக அரசு பட்ஜெட் கூட்டத்தொடரில், திருப்பூர் மாவட்டத்தில் புதிய விதை பரிசோதனை நிலையம் அமைக்கப்படுமென அறிவிக்கப்பட்டது.வேளாண் துறை அதிகாரிகள் கூறுகையில், 'நடப்பு ஆண்டிலேயே பணிகளை துவக்க வசதியாக, 23.50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பரிசோதனை நிலையம் அமைக்க, இடம் தேர்வு செய்யும் பணி துவங்கியுள்ளது' என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X