அரசியல் செய்தி

தமிழ்நாடு

கூடங்குளம் மின்சாரத்தை முழுமையாக பெற கோரிக்கை

Added : செப் 07, 2021
Share
Advertisement
அ.தி.மு.க., - தங்கமணி: நீண்ட நாள் மின் கொள்முதலை, அதிக விலைக்கு வாங்கி விட்டதாக கூறுகிறீர்கள். எந்த மாநிலமும் தன்னுடைய சுய உற்பத்தியில், மாநில மின் தேவையை பூர்த்தி செய்ய இயலாது. உங்கள் காலத்திலும் வாங்கப்பட்டது; எங்கள் காலத்திலும் வாங்கப்பட்டது.ஒரு நாள் மின் இணைப்பு திட்டத்தின் கீழ், 24 மணி நேரத்தில் வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது. இதில், 10 லட்சம் மின் இணைப்புகள்

அ.தி.மு.க., - தங்கமணி:

நீண்ட நாள் மின் கொள்முதலை, அதிக விலைக்கு வாங்கி விட்டதாக கூறுகிறீர்கள். எந்த மாநிலமும் தன்னுடைய சுய உற்பத்தியில், மாநில மின் தேவையை பூர்த்தி செய்ய இயலாது. உங்கள் காலத்திலும் வாங்கப்பட்டது; எங்கள் காலத்திலும் வாங்கப்பட்டது.

ஒரு நாள் மின் இணைப்பு திட்டத்தின் கீழ், 24 மணி நேரத்தில் வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது. இதில், 10 லட்சம் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மின் பணியாளர்களை தேர்வு செய்வதற்காக, ஒப்பந்ததொழிலாளர்களுக்கு தேர்வு நடத்தினோம். தேர்வில் 92 ஆயிரம் பேர் பங்கேற்றனர். அனைத்தும் 'வீடியோ' பதிவு செய்யப்பட்டது.

நீதிமன்றம் ஆட்களை நியமிக்க அனுமதி அளித்தது. இதுவரை 9,700 பேருக்கு பணி நியமனம் செய்யப்பட்டது. இன்னும் 5,000 பேர் தயாராக உள்ளனர்; அவர்களுக்கும் பணி வழங்க வேண்டும்.எதிர்காலத்தில் மின் வாகனங்கள் அதிகம் பயன்படுத்தும் நிலை உருவாகும் என்பதால், மின் வாகனங்களுக்கு, 'சார்ஜ்' செய்யும் இடங்களை அதிக அளவில் உருவாக்க வேண்டும்.

கூடங்குளம் அணு மின் நிலையத்தில், மூன்றாவது மற்றும் நான்காவது அலகு கட்டுமானப் பணி நடக்கிறது. அதில் உற்பத்தியாகும்மின்சாரத்தை, முழுமையாக தமிழகத்திற்கு பெற, முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.மின் வாரியம் என்பது சேவைத் துறை; வணிக நோக்கில் பணியாற்ற முடியாது. எனவே, நஷ்டம் ஏற்படுகிறது. கொரோனா வந்த போது பழைய மின் கட்டணத்தை செலுத்தும்படி கூறினோம். நீங்கள் 2019 மே மாத கட்டணத்தை செலுத்தும்படி கூறி உள்ளீர்கள். இதனால் கட்டணம் அதிகம் வந்துள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜி:

கொரோனா காலத்தில், 2019 மே மாத கட்டணம் அல்லது முந்தைய மாத கட்டணம் அல்லது மொபைல் போனில் 'மீட்டர் ரீடிங்'கை புகைப்படம் எடுத்து, மின் கட்டணம் செலுத்தலாம் என மூன்று வாய்ப்பு அளிக்கப்பட்டது. கொரோனா காரணமாக, கூடுதல் வைப்பு தொகை வசூலிக்க வேண்டாம் என முதல்வர் கூறியுள்ளார்.

அதிக கட்டணம் வசூலானதாக தெரிவித்தவர்களின் மின் இணைப்பு எண்ணை ஆய்வு செய்தபோது, தவறு எதுவும் நடக்கவில்லை என்பது தெரிந்தது. ஒரு இடத்தில் மட்டும் மீட்டர் பழுதடைந்திருந்தது. நீங்கள் இணைப்பு எண்ணை குறிப்பிட்டு கடிதம் கொடுத்தால், உடனடியாக ஆய்வு செய்யப்படும்.

தங்கமணி:

நிலக்கரி கொள்முதலில், 'இ - டெண்டர்' கொண்டு வந்து, ஐந்தாண்டில் 2,000 கோடி ரூபாய் சேமித்துள்ளோம். நிலக்கரியை பொறுத்தவரை, தங்கமணி வசமாக மாட்டிக் கொண்டதாக அமைச்சர் பேட்டி அளித்துள்ளார். நிலக்கரி காணாமல் போக வாய்ப்பில்லை; விசாரித்து கொள்ளுங்கள்.'ஆன்லைனில்' மது விற்பனை பரிசீலிக்கப்படும் என, டாஸ்மாக் மேலாண் இயக்குனர் கூறியுள்ளார். இதை மறு பரிசீலனை செய்யுங்கள்.

தமிழகத்தை மின் மிகைமாநிலமாக வைத்திருந்தோம். தற்போது, அணிலும், பெருச்சாளியும் உள்ள மாநிலமாக உள்ளது. அதை கட்டுப்படுத்த வேண்டும்.

அமைச்சர் தியாகராஜன்:

சேவை மனப்பான்மையுடன் நடத்தும் நிறுவனத்தை நஷ்டத்தில் இயக்க வேண்டும் என, கட்டளை இல்லை. நிர்வாக திறமையுடன் செயல்படுத்தினால் சீர்படுத்த முடியும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X