பொது செய்தி

தமிழ்நாடு

24 மணி நேர தடுப்பூசி மையத்தில் 10 ஆயிரத்து, 51 பேருக்கு தடுப்பூசி

Added : செப் 07, 2021
Share
Advertisement
திருப்பூர்,:திருப்பூர் மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், 15 நாட்களில், 10 ஆயிரத்துக்கு, 51 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.தடுப்பூசி செலுத்தாதவர் பயன்பெற ஏதுவாக, திருப்பூர் மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் ஆக., 28ம் தேதி முதல், 24 மணி நேரம் தடுப்பூசி மையம் திறக்கப்பட்டது. சுழற்சி முறையில் பணியாற்ற டாக்டர், செவிலியர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.இரவு, பகலாக தொடர்ந்து

திருப்பூர்,:திருப்பூர் மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், 15 நாட்களில், 10 ஆயிரத்துக்கு, 51 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.தடுப்பூசி செலுத்தாதவர் பயன்பெற ஏதுவாக, திருப்பூர் மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் ஆக., 28ம் தேதி முதல், 24 மணி நேரம் தடுப்பூசி மையம் திறக்கப்பட்டது. சுழற்சி முறையில் பணியாற்ற டாக்டர், செவிலியர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.இரவு, பகலாக தொடர்ந்து தடுப்பூசி செலுத்தப்பட்டது.
நீண்ட வரிசையில் காத்திருந்து மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். பிற பகுதி மக்களுக்கு பள்ளி, பொது இடங்களில் தொடர்ந்து முகாம் நடந்து வரும் நிலையில், மருத்துவக் கல்லுாரியில் நடக்கும் முகாமில் வடமாநிலத்தவர், பனியன் நிறுவனங்களில் இருந்து குழுவாக பலர் வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்கின்றனர்.
மருத்துவ கல்லுாரி, உதவி நிர்வாக அலுவலர் செந்தில்குமார் கூறுகையில், 'முகாம் துவங்கியது முதல் கடந்த, 15 நாளில், 490 பேருக்கு கோவேக்ஸின், 9,561 பேருக்கு கோவிஷீல்டு என, 10 ஆயிரத்து, 51 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X