அரசியல் செய்தி

தமிழ்நாடு

'டாஸ்மாக்' ஊழியர்களுக்கு ரூ.500 ஊதியம் உயர்வு

Added : செப் 07, 2021
Share
Advertisement
''டாஸ்மாக் பணியாளர்களுக்கு, மாத தொகுப்பூதியம், 500 ரூபாய் கூடுதலாக, 2021 ஏப்ரல் முதல் உயர்த்தி வழங்கப்படும்,'' என, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்புகள்:* மதுபானங்களை கள்ளத்தனமாக விற்பனை செய்தல், கள்ளச்சாராயம் காய்ச்சுதல் குற்றங்களுக்கு தண்டனை பெற்று விடுதலையாகி, மனம் திருந்துபவர்களின்

''டாஸ்மாக் பணியாளர்களுக்கு, மாத தொகுப்பூதியம், 500 ரூபாய் கூடுதலாக, 2021 ஏப்ரல் முதல் உயர்த்தி வழங்கப்படும்,'' என, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்புகள்:

* மதுபானங்களை கள்ளத்தனமாக விற்பனை செய்தல், கள்ளச்சாராயம் காய்ச்சுதல் குற்றங்களுக்கு தண்டனை பெற்று விடுதலையாகி, மனம் திருந்துபவர்களின் பொருளாதார மறுவாழ்வுக்காக, 5 கோடி ரூபாய் மறுவாழ்வு நிதி வழங்கப்படும்

* மது அருந்துதலுக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரத்துடன், மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவதற்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரத்தையும் இணைந்து மேற்கொள்ள, 4 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்க்ஷ

* 'டாஸ்மாக்' நிறுவனத்தில், 6,761 மேற்பார்வையாளர்கள், 15 ஆயிரத்து 90 விற்பனையாளர்கள் 3,158 உதவி விற்பனையாளர்கள் என, மொத்தம், 25 ஆயிரத்து 9 பணியாளர்கள் தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு மாத தொகுப்பூதியம் 500 ரூபாய் கூடுதலாக 2021 ஏப்., முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும். இதற்காக ஆண்டுக்கு 15 கோடி ரூபாய் செலவாகும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X