தமிழ்நாடு

தாமரைக்குளத்துக்குள் இறைச்சி கழிவு: பொதுப்பணித்துறை அதிகாரிகள் 'கப்சிப்': நடவடிக்கை எடுக்க தயக்கம் ஏனோ?

Updated : செப் 08, 2021 | Added : செப் 07, 2021
Share
Advertisement
அவிநாசி:அவிநாசி, தாமரைக்குளத்தில், இறைச்சிக்கழிவு உட்பட அனைத்து குப்பைகளும் கொட்டப்படுவதால் துர்நாற்றம் வீசுகிறது.அவிநாசி பழைய பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட நகரப்பகுதிகள், மங்கலம் ரோடு உள்ளிட்ட இடங்களில் உள்ள இறைச்சி வியாபாரிகள் மற்றும் கடைக்காரர்கள், கோழி இறைச்சி உள்ளிட்ட குப்பை கழிவுகளை தாமரைக்குளத்தில் கொட்டுகின்றனர்.இதனால், அப்பகுதி முழுக்க துர்நாற்றம்
தாமரைக்குளத்துக்குள் இறைச்சி கழிவு: பொதுப்பணித்துறை அதிகாரிகள் 'கப்சிப்': நடவடிக்கை எடுக்க தயக்கம் ஏனோ?

அவிநாசி:அவிநாசி, தாமரைக்குளத்தில், இறைச்சிக்கழிவு உட்பட அனைத்து குப்பைகளும் கொட்டப்படுவதால் துர்நாற்றம் வீசுகிறது.அவிநாசி பழைய பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட நகரப்பகுதிகள், மங்கலம் ரோடு உள்ளிட்ட இடங்களில் உள்ள இறைச்சி வியாபாரிகள் மற்றும் கடைக்காரர்கள், கோழி இறைச்சி உள்ளிட்ட குப்பை கழிவுகளை தாமரைக்குளத்தில் கொட்டுகின்றனர்.

இதனால், அப்பகுதி முழுக்க துர்நாற்றம் வீசுகிறது. அவ்வழியாக செல்லும் மக்கள், வாகன ஓட்டிகள், மூக்கை பொத்தியபடி தான் பயணிக்க வேண்டியுள்ளது. இதுபோன்ற செயல், தொடர்ந்து நடந்து வரும் நிலையில், குளம் மற்றும் குளக்கரையில் குப்பை கொட்டுவதை தடுக்கவும், மீறி குப்பை கொட்டுவோருக்கு அபராதம் விதிப்பது போன்ற நடவடிக்கைகளை பொதுப்பணித்துறையினர் எடுக்க வேண்டும்.

அதேபோல், நகரின் பிரதான நீர்நிலையான சங்கமாங்குளத்தை ஒட்டியுள்ள குடியிருப்புவாசிகள் மற்றும் கடைக்காரர்கள், வெளியேறும் குப்பை கழிவுகளை, குளத்தில் கொட்டுகின்றனர். இங்கும் கவனம் செலுத்த வேண்டும்.பொதுமக்கள் கூறுகையில், 'அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் வரலாற்றில் தொடர்புடைய தாமரைக்குளத்தில் கழிவு கொட்டுவது வேதனையாக உள்ளது. எனவே, பொதுப்பணித்துறையினர் இது குறித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.இதனால், அப்பகுதி முழுக்க துர்நாற்றம்வீசுகிறது. அவ்வழியாக செல்லும் மக்கள், வாகன ஓட்டிகள், மூக்கை பொத்தியபடி தான்பயணிக்க வேண்டியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X