பொது செய்தி

தமிழ்நாடு

மின் திட்டத்தில் நிலம் எடுத்தால் வாடகை அடிப்படையில் இழப்பீடு: விவசாயிகள் சங்கத்தினர் மனு

Added : செப் 07, 2021
Share
Advertisement
திருப்பூர்:உயர்மின் கோபுரம் அமைக்கும் திட்டத்தில், விவசாயிகளுக்கு மாதவாடகை அடிப்படையில் இழப்பீடு வழங்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.இது குறித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்க (ஏ.ஐ.கே.எஸ்.,) நிர்வாகிகள், குமார், மதுசூதனன் உள்ளிட்டோர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கொடுத்த மனு:உயர்மின் கோபுரம் அமைக்கும் விவசாய நிலத்துக்கு, நியாயமான இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.
 மின் திட்டத்தில் நிலம் எடுத்தால் வாடகை அடிப்படையில் இழப்பீடு: விவசாயிகள் சங்கத்தினர் மனு

திருப்பூர்:உயர்மின் கோபுரம் அமைக்கும் திட்டத்தில், விவசாயிகளுக்கு மாதவாடகை அடிப்படையில் இழப்பீடு வழங்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.இது குறித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்க (ஏ.ஐ.கே.எஸ்.,) நிர்வாகிகள், குமார், மதுசூதனன் உள்ளிட்டோர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கொடுத்த மனு:உயர்மின் கோபுரம் அமைக்கும் விவசாய நிலத்துக்கு, நியாயமான இழப்பீடு வழங்கப்பட வேண்டும். வெளிப்படை தன்மை இல்லாமல், நிலம் கையகப்படுத்தப்படுகிறது. விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால், மாத வாடகை முறையில் இழப்பீடு வழங்க வேண்டும்.அரசாணைப்படி, பயிர், நிலம் மற்றும் மரங்களுக்கு, 10 மடங்கு அதிகமாக நிவாரணம் வழங்க வேண்டும். முழு இழப்பீடு வழங்கிய பிறகே, பணியை துவக்க வேண்டும். புதிய நிலம் எடுப்பு சட்டத்தின் படி, 100 சதவீதம் கருணை தொகை நிர்ணயித்து வழங்க வேண்டும்.திட்டப்பாதையில் உள்ள கிணறு, ஆழ்துளை கிணறு, வீடுகள் உள்ளிட்ட கட்டுமான பணிக்கு, சந்தை மதிப்பில் இழப்பீடு வழங்க வேண்டும். இழப்பீடாக, மாத வாடகை வழங்க வேண்டும். இனிவரும் புதிய திட்டங்களுக்கு, ரோட்டோரமாக, புதைவடமாக அமைத்தால், எந்த பிரச்னையும் இருக்காது. விருதுநகர் - கோவை திட்டத்தில், ரோட்டோரமாக புதைவடம் பதித்து, விவசாயிகளை பாதுகாக்க வேண்டும்.இவ்வாறு, அந்த மனுவில் கூறியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X