அரசியல் செய்தி

தமிழ்நாடு

'ஆன்லைன்' மது அமைச்சர் மறுப்பு

Added : செப் 07, 2021
Share
Advertisement
'ஆன்லைன்' மது அமைச்சர் மறுப்பு''ஆன்லைன் வாயிலாக, மது விற்பனை செய்யும் எண்ணம் அறவே இல்லை,'' என, மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார். அவரது பதிலுரை:'ஆன்லைன்' வாயிலாக மதுபானங்கள் விற்பனை செய்யப்படும் என மேலாண் இயக்குனர் கூறியதாக, செய்திகள் வந்துள்ளதாக சுட்டிக்காட்டினர். மதுபான விற்பனையை, ஆன்லைன் வாயிலாக செய்யும் எண்ணம் அரசுக்கு

'ஆன்லைன்' மது அமைச்சர் மறுப்பு

''ஆன்லைன் வாயிலாக, மது விற்பனை செய்யும் எண்ணம் அறவே இல்லை,'' என, மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார். அவரது பதிலுரை:

'ஆன்லைன்' வாயிலாக மதுபானங்கள் விற்பனை செய்யப்படும் என மேலாண் இயக்குனர் கூறியதாக, செய்திகள் வந்துள்ளதாக சுட்டிக்காட்டினர். மதுபான விற்பனையை, ஆன்லைன் வாயிலாக செய்யும் எண்ணம் அரசுக்கு கிடையாது. கொரோனா தொற்று காலத்தில், கர்நாடகாவில் மதுக்கடைகள் மூடப்படவில்லை.

தமிழகத்தில் மதுக்கடைகளை மூட, முதல்வர் உத்தரவிட்டார். கள்ளசாராயம், போலி மது, வெளிநாட்டு மது கடத்தலை தடுப்பதற்கான பணி, சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது. இந்தாண்டு, 11 ஆயிரத்து 822 பெண்கள் உள்பட 1.29 குற்றவாளிகள், இதுதொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன் வாயிலாக, 2.29 கோடி மதிப்பிலான 5.74 லட்சம் லிட்டர் கள்ளச்சாரய ஊறல்கள் 14.78 லட்சம் மதிப்பிலான 55 ஆயிரத்து 923 லிட்டர் கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு, அமைச்சர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X