எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

ஒரு லட்சம் விவசாய மின் இணைப்புகள் : அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு

Updated : செப் 08, 2021 | Added : செப் 07, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
''விவசாயிகளின் நலனை மேம்படுத்த ஒரு லட்சம் புதிய விவசாய மின் இணைப்புகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார். சட்டசபையில் அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:* மாநிலத்தின் விவசாய உற்பத்தியை பெருக்கி, விவசாயிகளின் நலனை மேம்படுத்தும் நோக்குடன், ஒரு லட்சம் புதிய விவசாய மின் இணைப்புகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்* மின்
ஒரு லட்சம், விவசாய மின் இணைப்புகள் , அமைச்சர் ,அறிவிப்பு

''விவசாயிகளின் நலனை மேம்படுத்த ஒரு லட்சம் புதிய விவசாய மின் இணைப்புகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி
தெரிவித்தார். சட்டசபையில் அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:

* மாநிலத்தின் விவசாய உற்பத்தியை பெருக்கி, விவசாயிகளின் நலனை மேம்படுத்தும் நோக்குடன், ஒரு லட்சம் புதிய விவசாய மின் இணைப்புகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்

* மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், தமிழகத்தில் கிடைக்கப்பெறும் அபரிமிதமான சூரிய சக்தியை கொண்டு மின்சாரம் தயாரிக்கும், 'சூரிய மின் சக்தி பூங்கா'வை மாவட்டந்தோறும் நிறுவ உள்ளது

* தனியார் நிறுவனங்களிடம் இருந்து அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவதை குறைத்து, சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையங்களை அமைத்து, அவற்றின் வாயிலாக 10 ஆண்டுகளில் 20 ஆயிரம் மெகா வாட் சூரிய மின் உற்பத்தி மற்றும் 10 ஆயிரம் மெகா வாட் மின் கலன்கள் சேமிப்பு செய்து, மக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
முதல் கட்டமாக 4,000 மெகா வாட் திறன் உள்ள சூரிய சக்தி மின் நிலையங்கள் மற்றும், 2,000 மெகா வாட் திறனுள்ள மின் கலன்கள் சேமிப்பு திட்டம் துவங்க நடவடிக்கை எடுக்கப்படும்

* சென்னை எண்ணுாரில், 2,000 மெகா வாட் அளவுக்கு சிறிய அளவிலான திறன் கொண்ட அதிக எண்ணிக்கையிலான எரிவாயு இயந்திர மின் திட்டத்தை, சாத்தியக்கூறு அடிப்படையில் நிறுவ திட்டமிடப்பட்டு உள்ளது

* கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோதையாற்றில், 500 மெகா வாட் நீரேற்று மின் திட்டம் அமைக்கப்படும்

* தேனியில் உள்ள மணலாற்றில், 500 மெகா வாட் நீரேற்று மின் திட்டம் அமைக்கப்படும்

* எரிபொருள் வினியோக ஒப்பந்தம் வாயிலாக வழங்கப்படாத நிலக்கரியின் ஒரு பகுதியை, நிலக்கரி சுரங்கங்களுக்கு அருகில் உள்ள தற்சார்பு மின் உற்பத்தி நிலையங்களுக்கு வழங்கி, அதற்கு ஈடாக மின் கொள்முதல் செய்து கொள்ளும் திட்டம் உள்ளது. அதன்படி, மகா நதி நிலக்கரி நிறுவனத்திடம் இருந்து வழங்கப்படாத நிலக்கரியை, அருகில் உள்ள மின் நிலையங்களுக்கு வழங்கி, அதற்கு ஈடாக 1,000 மெகா வாட் வரை மின்சாரம் கொள்முதல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்

* அனைத்து மின் இணைப்புகளிலும் தற்போது உள்ள மின் அளவிகள், 'ஸ்மார்ட் மீட்டர்' எனப்படும் வினைத் திறன்மிகு மின் அளவிகளாக மாற்றம் செய்யப்படும். இந்த மின் அளவி பொருத்துவதால், மின் நுகர்வோர், தம் மின் பயன்பாட்டை எந்நேரமும் கண்காணிக்க முடியும்* மாநிலத்தில் 159 புதிய துணை மின் நிலையங்கள், 1,979 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்

* சென்னை மாநகராட்சியின் அனைத்து பகுதிகளிலும் மின் பாதைகளை, புதைவடங்களாக மாற்றி செயலாக்கத்திற்கு கொண்டு வரப்படும்.இவ்வாறு செந்தில் பாலாஜி அறிவித்தார்.


'டாஸ்மாக்' ஊழியர்களுக்கு ரூ.500 ஊதியம் உயர்வு



''டாஸ்மாக் பணியாளர்களுக்கு மாத தொகுப்பூதியம் 500 ரூபாய் கூடுதலாக, 2021 ஏப்ரல் முதல் உயர்த்தி வழங்கப்படும்,'' என, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்புகள்:

* மதுபானங்களை கள்ளத்தனமாக விற்பனை செய்தல், கள்ளச்சாராயம் காய்ச்சுதல் போன்ற குற்றங்களுக்கு தண்டனை பெற்று விடுதலையாகி, மனம் திருந்துபவர்களின் பொருளாதார மறுவாழ்வுக்காக 5 கோடி ரூபாய் மறுவாழ்வு நிதி வழங்கப்படும்

* 'டாஸ்மாக்' நிறுவனத்தில் 6,761 மேற்பார்வையாளர்கள் 15 ஆயிரத்து 90 விற்பனையாளர்கள் 3,158 உதவி விற்பனையாளர்கள் என, மொத்தம் 25 ஆயிரத்து 9 பணியாளர்கள் தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு மாத தொகுப்பூதியம் 500 ரூபாய் கூடுதலாக, 2021 ஏப்., முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும். இதற்காக
ஆண்டுக்கு 15 கோடி ரூபாய் செலவாகும்.இவ்வாறு அவர் கூறினார்.


'ஆன்லைன்' மது விற்பனை: அமைச்சர் மறுப்பு



''ஆன்லைன் வாயிலாக, மது விற்பனை செய்யும் எண்ணம் அறவே இல்லை,'' என, மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார். அவரது பதிலுரை:'ஆன்லைன்' வாயிலாக மதுபானங்கள் விற்பனை செய்யப்படும் என மேலாண் இயக்குனர் கூறியதாக, செய்திகள் வந்துள்ளதை சுட்டிக்காட்டினர். மதுபான விற்பனையை ஆன்லைன் வாயிலாக செய்யும் எண்ணம் அரசுக்கு கிடையாது. கொரோனா தொற்று காலத்தில், கர்நாடகாவில் மதுக்கடைகள் மூடப்படவில்லை.

தமிழகத்தில் மதுக் கடைகளை மூட, முதல்வர் உத்தரவிட்டார். கள்ளச்சாராயம், போலி மது, வெளிநாட்டு மது கடத்தலை தடுப்பதற்கான பணி, சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது. இந்தாண்டு, 11 ஆயிரத்து 822 பெண்கள் உட்பட 1.29 லட்சம் குற்றவாளிகள், இதுதொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் வாயிலாக, 2.29 கோடி ரூபாய் மதிப்பிலான 5.74 லட்சம் லிட்டர் கள்ளச்சாரய ஊறல்கள் 14.78 லட்சம் ரூபாய் மதிப்பிலான 55 ஆயிரத்து 923 லிட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு, அமைச்சர் கூறினார்.


Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழன் - Madurai,இந்தியா
08-செப்-202122:44:53 IST Report Abuse
தமிழன் இணைப்பு மட்டுந்தான், நோ கரண்ட்
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
08-செப்-202112:30:22 IST Report Abuse
duruvasar திராவிட நல்லாட்சி பெயரை கெடுக்க கிளம்பியுள்ள ஒரு கோடி ஆரிய அணில்களை என்ன செய்ய போறீங்க அமைச்சரே. உங்கள் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருடன் ஒன்றிணைந்து தீய விஷம சக்திகளை ஒழிக்க எடுக்கும் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
Rate this:
Cancel
பாலா - chennai,இந்தியா
08-செப்-202110:29:38 IST Report Abuse
பாலா குடுங்க குடுங்க கட தேங்காய எடுத்து வளி பிள்ளையருக்கு உடைங்க / உடனே விவசாயி தான் நமக்கு சோறு போடறான அவனுக்கு குடுத்தா என்னன்னு கேள்வி கேட்பான் ஆனா விவசாயிக்ற போர்வையில சலுகை அனுபவிக்கறவன் தான் அதிகம் இங்கன எம்புட்டு பேரு விவசாயி சொந்தமா நிலம் வெச்சிருக்கான் ரொம்ப சொற்ப சதவிகிதம் தான் 70 சதவிகிதம் பேரு விவசாய வேலைக்கு போறவங்க அவங்களுக்கு வெறும் காத்துதான் ஆகாரம் அவன் பேர சொல்லி அனுபவிக்கறவன் ஏராளம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X