பொது செய்தி

தமிழ்நாடு

கல்வி நிறுவனங்களில் பாதுகாப்பு நடவடிக்கை: மாநகராட்சி சுகாதார பிரிவினர் தீவிர கண்காணிப்பு

Added : செப் 07, 2021
Share
Advertisement
திருப்பூர்:தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக மூடப்பட்ட கல்வி நிறுவனங்கள் கடந்த, 1ம் தேதி முதல் இயங்கத் துவங்கியுள்ளன. இந்நிலையில் பல்வேறு பகுதிகளில் ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு கொரோனா தொற்று பரவல் உறுதியாகியுள்ளது.இதனால், திருப்பூர் மாநகராட்சி சுகாதார பிரிவினர் தீவிரமாக கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளனர். மாநகராட்சி
 கல்வி நிறுவனங்களில் பாதுகாப்பு நடவடிக்கை: மாநகராட்சி சுகாதார பிரிவினர் தீவிர கண்காணிப்பு

திருப்பூர்:தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக மூடப்பட்ட கல்வி நிறுவனங்கள் கடந்த, 1ம் தேதி முதல் இயங்கத் துவங்கியுள்ளன. இந்நிலையில் பல்வேறு பகுதிகளில் ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு கொரோனா தொற்று பரவல் உறுதியாகியுள்ளது.இதனால், திருப்பூர் மாநகராட்சி சுகாதார பிரிவினர் தீவிரமாக கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளனர்.
மாநகராட்சி பகுதியில் இரு மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டு பள்ளி சிறார் உடல் நலம் குறித்து கண்காணிக்கப்படுகிறது.மாநகராட்சி கமிஷனர் கிராந்தி குமார் கூறியதாவது: அனைத்து கல்விநிறுவனங்களிலும் நுழைவாயில் பகுதியில் உடல் வெப்பநிலை கண்டறிதல், உள்ளே, வெளியே என தனிப்பாதை, அனைவரும் முறையாக முககவசம் அணிதல், சோப்பு மூலம் கைகள் கழுவும் வசதி, 2 மணி நேரத்துக்கு ஒருமுறை கட்டாயம் கைகள் சுத்தம் செய்தல்.வகுப்புகளில் உரிய தனி மனித இடைவெளி, மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் முறையாகப் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கென அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு குழுவினர் தொடர்ந்து சோதனை மேற்கொள்வர்.இவ்வாறு அவர் கூறினார்.நகர் நல அலுவலர் பிரதீப் கூறுகையில், ''பள்ளிகளில், உரிய பகுதி சுகாதார மையங்களின் தொடர்பு எண் அளிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் உடல்நல குறைவு ஏற்பட்டால் உரிய தகவல் அளித்து மருத்துவ உதவி பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X