பொது செய்தி

தமிழ்நாடு

புலையர் இனத்தவருக்கு நில உரிமை பட்டா மலைவாழ் மக்கள் சங்கத்தினர் மனு

Added : செப் 07, 2021
Share
Advertisement
திருப்பூர்:வன உரிமை சட்டப்படி, நில உரிமை பட்டா வழங்க வேண்டுமென, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.உடுமலை தாலுகா எல்லையில், புலையர் மற்றும் மதுவார் பழங்குடியினர் வாழ்ந்து வருகின்றனர். வன உரிமை சட்டப்படி, நில உரிமை பட்டா வழங்க வேண்டுமென, 10 ஆண்டுகளாக இவர்கள் போராடி வருகின்றனர்.நில உரிமை, சமூக உரிமையை பெற, ஒவ்வொரு செட்டில்மென்ட் பகுதியிலும், வன
 புலையர் இனத்தவருக்கு நில உரிமை பட்டா மலைவாழ் மக்கள் சங்கத்தினர் மனு

திருப்பூர்:வன உரிமை சட்டப்படி, நில உரிமை பட்டா வழங்க வேண்டுமென, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.உடுமலை தாலுகா எல்லையில், புலையர் மற்றும் மதுவார் பழங்குடியினர் வாழ்ந்து வருகின்றனர். வன உரிமை சட்டப்படி, நில உரிமை பட்டா வழங்க வேண்டுமென, 10 ஆண்டுகளாக இவர்கள் போராடி வருகின்றனர்.நில உரிமை, சமூக உரிமையை பெற, ஒவ்வொரு செட்டில்மென்ட் பகுதியிலும், வன உரிமைக்குழு அமைத்து, கிராம சபா நடத்தப்பட்டு, நில அளவை செய்து வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளது.கடந்த லோக்சபா தேர்தல் நேரத்தில், தேர்தல் நடத்தை விதி அமலானதும், நில உரிமை பட்டா விவகாரம் கிடப்பில் போடப்பட்டது. சட்டசபை தேர்தல் நேரத்திலும், முடிவு கிடைக்கவில்லை.இது குறித்து, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினர், நேற்று, கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனு:முதல்கட்டமாக, 700 பேருக்கு நில பட்டா வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, மாவட்ட வன உரிமை குழுவும் பரிந்துரை செய்துள்ளது. இந்நிலையில், முதுவார் பழங்குடியினருக்கு மட்டும் பட்டா வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. உடுமலை பகுதியில், பல தலைமுறைகளாக வசிக்கும் புலையர் இன மக்களுக்கும் பட்டா வழங்க கோரி, முதல்வரிடமும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, மனுவில் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X