பொது செய்தி

தமிழ்நாடு

சில வரி செய்திகள்... பூக்கள் விலை உயர்வு

Added : செப் 07, 2021
Share
Advertisement
திருப்பூர் பூ மார்க்கெட்டில் மல்லிகை கிலோ, 200 ரூபாய்க்கும், முல்லை, 150 ரூபாய்க்கும் விற்றது. அமாவாசை முடிந்து இன்று வளர்பிறை முகூர்த்த தினம் என்பதால், நேற்று காலை பூ விலை கிடுகிடுவென உயர்ந்தது. பூ மார்க்கெட்டில் மல்லிகை கிலோ, ஆயிரம் ரூபாய்க்கும், முல்லை, 450 ரூபாய்க்கும் விற்றது. கடந்த வாரம், 100 ரூபாய் இருந்த ஒரு கிலோ அரளி, நேற்று கிலோ, 250 ரூபாய்க்கு விற்றது. வரத்து குறைவால்

திருப்பூர் பூ மார்க்கெட்டில் மல்லிகை கிலோ, 200 ரூபாய்க்கும், முல்லை, 150 ரூபாய்க்கும் விற்றது. அமாவாசை முடிந்து இன்று வளர்பிறை முகூர்த்த தினம் என்பதால், நேற்று காலை பூ விலை கிடுகிடுவென உயர்ந்தது. பூ மார்க்கெட்டில் மல்லிகை கிலோ, ஆயிரம் ரூபாய்க்கும், முல்லை, 450 ரூபாய்க்கும் விற்றது. கடந்த வாரம், 100 ரூபாய் இருந்த ஒரு கிலோ அரளி, நேற்று கிலோ, 250 ரூபாய்க்கு விற்றது.
வரத்து குறைவால் கனகாம்பரம் கிலோ, 900 ரூபாய்க்கும், செவ்வந்தி, 200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இன்று முகூர்த்த தினம் என்பதால் நேற்று மார்க்கெட்டில் வழக்கத்தை விட கூட்டம் அதிகரித்திருந்தது.

விபத்தில் ஒருவர் பலி
வெள்ளகோவில் - மூலனுார் ரோட்டில் வசிக்கும் முத்துக்குமார், 49. இவர், பனியன் துணி அரைக்கும் இயந்திரம் வைத்து நடத்தி வந்தார். நேற்று முன்தினம், இரவு 8:00 மணிக்கு, கோவை ரோட்டில் தனது பைக்கில் சென்றபோது பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே வேன் மீது மோதி விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி, நேற்று, காலை இறந்தார். வெள்ளகோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.

தனியாரிடம் பஞ்சமி நிலம்

தனியார் ஆக்கிரமிப்பில் உள்ள பஞ்சமி நிலத்தை மீட்டுத்தர வேண்டுமென, கோவையில் வசிக்கும் நபர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். கோவை, வெள்ளலுாரை சேர்ந்த பெருமாள், கலெக்டர் ஆபீசில் நேற்று கொடுத்த மனுவில், 'தாத்தா கருப்பன் பெயரில், 1.75 ஏக்கர் நிலத்துக்கு, 1935ம் ஆண்டு நிபந்தனை பட்டா வழங்கப்பட்டது. ஆதிதிராவிட மக்களுக்கு வழங்கிய பஞ்சமி நிலத்தை, சிலர் அபகரித்து வைத்துள்ளனர்; பட்டா மாறுதலும் செய்துள்ளனர். இது தொடர்பான வழக்கு கோர்ட்டில் உள்ளது. ஆதிதிராவிடருக்கு வழங்கிய பஞ்சமி நிலத்தை மீட்டுத்தர வேண்டும்,' என்று தெரிவித்துள்ளார்.

வருவாய் தரும் பெருநெல்லி
பொங்கலுார், வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியர் ராஜலிங்கம் அறிக்கை:மாவட்டத்தில், 524 ஹெக்டர் பெருநெல்லி பயிரிடப்பட்டுள்ளது. உப்பை தாங்கி வளரும் பயிர் என்பதால் பாதிப்பு குறைவு. ஜூன் முதல் அக்., வரை நடுவது சிறந்தது. ஒரு மீ., நீள, அகல, ஆழமுள்ள குழியில், 6 மீ., இடைவெளியில் நடுவதால் நல்ல விளைச்சல் கிடைக்கும்.இளம்செடி பராமரிப்பு, நீர் நிர்வாகம், ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை, நுண்ணூட்டகம் தெளித்தல், ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு உள்ளிட்ட வழிமுறைகளைப் பயன்படுத்தி, பெருநெல்லி விளைச்சலை மேலும் அதிகப்படுத்த முடியும். மொட்டுக்கட்டி உருவாக்கப்பட்ட பெருநெல்லி செடிகள், நடவு செய்த, 4 -- 5 ஆண்டுகளில் காய்க்கும் திறன் பெற்றது. அதன் மூலம், விவசாயிகள் நல்ல லாபம் ஈட்டலாம்.

ரூ.3.21 லட்சம் அபராதம் வசூல்
காங்கயத்தில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த பிரதான ரோடுகளில் சிக்னல் அமைக்கப்பட்டு, போக்குவரத்து போலீசார் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அவ்வகையில், கடந்த மாதம் போக்குவரத்து போலீசார் வாகன தணிக்கை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்தனர். அதில், போதையில், டிரைவிங் லைசன்ஸ் இல்லாமல், ஹெல்மெட் அணியாமல், மொபைல் போன் பேசியபடி வாகனம் ஓட்டியது உட்பட பல்வேறு விதிமீறல் தொடர்பாக, 3 ஆயிரத்து, 825 வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர்களிடம் இருந்து, 3 லட்சத்து, 21 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, வசூலிக்கப்பட்டது.

நிர்வாகிகள் தேர்வு
திருப்பூர் மாவட்ட எஸ்.டி.பி.ஐ., ஒருங்கிணைந்த பொதுக்குழு கூட்டம், மாவட்ட தலைவர் பஷீர் அகமது தலைமையில் நடைபெற்றது. இதில், 2018-21 ஆண்டுக்கான செயலறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. கூட்டத்தில் திருப்பூர் தெற்கு, வடக்கு என இரு மாவட்ட நிர்வாக கமிட்டி அமைக்கப்பட்டது. தெற்கு மாவட்ட தலைவராக ஹாரிஸ் பாபு, பொது செயலாளராக மன்சூர் அகமது கான், பொருளாளராக முகமது பாரூக் மற்றும் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். வடக்கு மாவட்ட தலைவராக பஷீர் அகமது, பொது செயலாளராக இதயதுல்லா, பொருளாளராக ஜாபர் சாதிக் மற்றும் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாநில செயலாளர் அகமது நவவி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.

ஒப்பாரி வைத்து போராட்டம்
சமையல் காஸ் விலை உயர்வை கண்டித்தும், பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்க வலியுறுத்தியும், ஜனநாயக மாதர் சங்கத்தினர் நேற்று, மாநகராட்சி அலுவலகம் முன், ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட தலைவர் மைதிலி தலைமை வகித்தார். செயலாளர் பவித்ரா, செயலாளர் ஷகிலா, நிர்வாகிகள் வளர்மதி, லட்சுமி, பாசுமதி, கவிதா ஆகியோர் காஸ் விலையை குறைக்க வலியுறுத்தி பேசினர். காஸ் சிலிண்டருக்கு பாடை கட்டி, மாலை அணிவித்து, ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.* எம்.எஸ்., நகர் கிளை சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, முன்னாள் கவுன்சிலர் ஜெயகிருஷ்ணன் தலைமை வகித்தார். தாலுகா கமிட்டி உறுப்பினர் சவுந்திரராஜன், முன்னாள் கவுன்சிலர் மரிய சசிலியா உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X