பொது செய்தி

தமிழ்நாடு

காஞ்சி, செங்கையில் 11ல் தேசிய மக்கள் நீதிமன்றம்

Added : செப் 07, 2021
Share
Advertisement
செங்கல்பட்டு : செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில், செப்., 11ம் தேதி, தேசிய மக்கள் நீதிமன்றம் நடக்கிறது என, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலர் மீனாட்சி தெரிவித்தார்.ஆணைக்குழு செயலர் மீனாட்சி செய்திக் குறிப்பு:செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில், வரும் 11ம் தேதி, முதன்மை மாவட்ட நீதிபதி மேவிஸ் தீபிகா சுந்தரவதனா தலைமையில், தேசிய மக்கள் நீதிமன்றம் நடக்கிறது.

செங்கல்பட்டு : செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில், செப்., 11ம் தேதி, தேசிய மக்கள் நீதிமன்றம் நடக்கிறது என, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலர் மீனாட்சி தெரிவித்தார்.

ஆணைக்குழு செயலர் மீனாட்சி செய்திக் குறிப்பு:செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில், வரும் 11ம் தேதி, முதன்மை மாவட்ட நீதிபதி மேவிஸ் தீபிகா சுந்தரவதனா தலைமையில், தேசிய மக்கள் நீதிமன்றம் நடக்கிறது. இதில் அனைத்து சிவில் வழக்குகள், விவாகரத்து அல்லாத குடும்ப வழக்குகள், நில எடுப்பு இழப்பீடு, வங்கி கடன் மற்றும் செக்மோசடி, குற்றவியல் வழக்குகள் உள்ளிட்ட அனைத்து வழக்குகளும் எடுத்துக்கொள்ளப்படும்.

மக்கள் நீதிமன்றத்தில் சமரசமாக பேசி முடிக்கப்படும் வழக்குகள் மீது, மேல் முறையீடு கிடையாது. செங்கல்பட்டு ஒருங்கிணைந்த வளாகத்தில் உள்ள, மாற்றுமுறை தீர்வுமைய வளாகத்தில், கடந்த மாதம் 27 துவங்கி, 9ம் தேதி வரை, தினமும் பிற்பகல் 2:30 மணியிலிருந்து மாலை 4:30 வரை, வழக்குகளை சமரசம் பேசி முடிக்க, அமர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.வழக்குககளை விரைவாக மற்றும் சுமுகமாக முடித்துக்கொள்ள விரும்புவோர், அவரவர் வழக்குகள் நடைபெறும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X