பறிமுதல் செய்த கார் திருடியவர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பறிமுதல் செய்த கார் திருடியவர் கைது

Added : செப் 07, 2021
Share
பெரம்பலுார்:போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட காரை திருடி சென்ற உரிமையாளரை, பெரம்பலுார் தனிப்படை போலீசார் கைது செய்தனர். பெரம்பலுார் மாவட்டம், குன்னம் போலீசார் ஏப்., 19ல், மேலமாத்துார் கிராமம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, புதுச்சேரியில் இருந்து மது பாட்டில்களை கடத்தி வந்த காரை பறிமுதல் செய்து, அதில் வந்த மெய்யப்பன் உட்பட இருவரை கைது செய்தனர். பறிமுதல்
 பறிமுதல் செய்த கார் திருடியவர் கைது

பெரம்பலுார்:போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட காரை திருடி சென்ற உரிமையாளரை, பெரம்பலுார் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

பெரம்பலுார் மாவட்டம், குன்னம் போலீசார் ஏப்., 19ல், மேலமாத்துார் கிராமம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, புதுச்சேரியில் இருந்து மது பாட்டில்களை கடத்தி வந்த காரை பறிமுதல் செய்து, அதில் வந்த மெய்யப்பன் உட்பட இருவரை கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட 'டாடா இண்டிகா' கார், பெரம்பலுார் நான்கு ரோடு அருகே உள்ள மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸ் ஸ்டேஷனில் நிறுத்தப்பட்டிருந்தது.

மதுபாட்டில்கள் கடத்திய மெய்யப்பன், சுதாகர் ஆகிய இருவரும் ஜாமினில் வந்தனர். இந்நிலையில், 5ம் தேதி காலை காரை காணவில்லை. அதிர்ச்சியடைந்த மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் தமிழரசி, பெரம்ப லுார் போலீசில் புகார் கொடுத்தார். கண்காணிப்பு 'கேமரா' காட்சிகளை பார்வையிட்டு விசாரித்தனர்.

இதில், காரை, அதன் உரிமையாளர் மெய்யப்பன் உள்ளிட்ட சிலர் சேர்ந்து திருடிச் சென்றது தெரிந்தது. மெய்யப்பன் மொபைல் போன் சிக்னலை வைத்து, பாலக்குறிச்சியில் இருந்த அவரை, காருடன் கைது செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X