வீடுகளுக்கு வழங்கும் சிலைக்கு அனுமதி வேண்டி மனு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வீடுகளுக்கு வழங்கும் சிலைக்கு அனுமதி வேண்டி மனு

Added : செப் 07, 2021
Share
காஞ்சிபுரம் : தமிழ்நாடு கைவினை காகிதகூழ் விநாயகர் சிலைகள் மற்றும் களிமண் பொம்மைகள் தயாரிப்பாளர்கள் சங்கத்தினர், விநாயகர் பொம்மைகளுடன் சென்று, கலெக்டர் ஆர்த்தியிடம் மனு அளித்துள்ளனர்.அதன் விபரம்:கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, பொது வெளியில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட தடை விதித்திருப்பது, எங்களின் வாழ்வாதாரத்தை முற்றிலும் முடக்கியுள்ளது.கல்விக்கூடங்கள், மால்,

காஞ்சிபுரம் : தமிழ்நாடு கைவினை காகிதகூழ் விநாயகர் சிலைகள் மற்றும் களிமண் பொம்மைகள் தயாரிப்பாளர்கள் சங்கத்தினர், விநாயகர் பொம்மைகளுடன் சென்று, கலெக்டர் ஆர்த்தியிடம் மனு அளித்துள்ளனர்.

அதன் விபரம்:கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, பொது வெளியில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட தடை விதித்திருப்பது, எங்களின் வாழ்வாதாரத்தை முற்றிலும் முடக்கியுள்ளது.கல்விக்கூடங்கள், மால், சினிமா தியேட்டர், பொழுதுபோக்கு பூங்காக்கள், கடற்கரை ஆகியவை பொதுமக்களுக்காக திறந்துவிடப்பட்டுள்ளன.

ஆனால், விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே கிடைக்கும் வருமானத்தை நம்பி தான், அன்றாட சாப்பாடு செலவு, கடன், வட்டி போன்ற விஷயங்களை சமாளித்து வருகிறோம்.விநாயகர் சதுர்த்திக்கு சிலைகள் வைக்கப்படாததால், பொம்மை செய்யும் ௨௦௦ குடும்பங்கள் சிரமப்படுகின்றன.குறிப்பாக, விநாயகர் சதுர்த்தியன்று, வீதியோரங்களில் களிமண் மூலம் விநாயகர் சிலைகள் செய்து, வீடுகளுக்கு கொடுப்பதற்கு எந்த தடையும் விதிக்க வேண்டாம்.ஏற்கனவே செய்து வைத்த விநாயகர் சிலைகள் மழையால் சேதமடைந்துள்ளன. அவற்றுக்கு, நஷ்டஈடாக உதவித்தொகை வழங்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X