பொது செய்தி

தமிழ்நாடு

மரம் ஒரு வரம்... வளர்ப்பது ஒரு தவம்!

Added : செப் 07, 2021
Share
Advertisement
திருப்பூர்:'வனத்துக்குள் திருப்பூர் -7' திட்டத்தில், தாராபுரம் கொல்லம்பட்டியில், 440 பியன் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன.இத்திட்டம், ஒரு லட்சம் என்ற இலக்கை நோக்கி வேகமாக பாய்ந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு தாலுகா பகுதியின் மழை, மண் வளம், நீர்வளம் ஆகியவற்றை கணக்கிட்டு, அதற்கு தகுந்தபடியான மரக்கன்றுகள் தேர்வு செய்யப்படுகின்றன.மழை குறைவான பகுதிகளில், வறட்சியை
 மரம் ஒரு வரம்... வளர்ப்பது ஒரு தவம்!

திருப்பூர்:'வனத்துக்குள் திருப்பூர் -7' திட்டத்தில், தாராபுரம் கொல்லம்பட்டியில், 440 பியன் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன.இத்திட்டம், ஒரு லட்சம் என்ற இலக்கை நோக்கி வேகமாக பாய்ந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு தாலுகா பகுதியின் மழை, மண் வளம், நீர்வளம் ஆகியவற்றை கணக்கிட்டு, அதற்கு தகுந்தபடியான மரக்கன்றுகள் தேர்வு செய்யப்படுகின்றன.மழை குறைவான பகுதிகளில், வறட்சியை தாங்கி வளரும் மரக்கன்றுகள் வளர்க்கப்படுகின்றன. விவசாயிகள், தரிசு நிலங்களில் பயனனுள்ள மரங்களை வளர்க்க, பெரிதும் ஆர்வம் காட்டுகின்றனர். அவ்வகையில், தாராபுரம் அருகே கொல்லம்பட்டி கிராமத்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது.வைத்தான் காட்டு தோட்டத்தில் நடந்த நிகழ்ச்சியில், உரிமையாளர் சின்னத்துரை, சகுந்தலா உள்ளிட்டோர், மரக்கன்று நடும் பணியை துவக்கி வைத்தனர்.'வனத்துக்குள் திருப்பூர்' திட்டக்குழுவினர், 440 பியன் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.'வனத்துக்குள் திருப்பூர் -7' திட்டத்தில், மரக்கன்று நட்டு வளர்க்க விரும்புவோர், 90470 86666 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, திட்டக்குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X