சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மைசூரு பலாத்கார வழக்கு: மேலும், ஒருவர் கைது

Added : செப் 07, 2021
Share
Advertisement
அவிநாசி:மைசூருவில், எம்.பி.ஏ., மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், சேவூரை சேர்ந்த மேலும், ஒருவரை போலீசார் கைது செய்தனர்.கர்நாடகா மாநிலம், மைசூரு நகரில் எம்.பி.ஏ., படித்து கொண்டிருந்த, 23 வயது மாணவி ஒருவர், தன் நண்பருடன் கடந்த 24ம் தேதி சாமுண்டி மலை அடிவாரத்தில் பேசி கொண்டிருந்தார்.ஏழு பேர் கொண்ட கும்பலால் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். நண்பரும்

அவிநாசி:மைசூருவில், எம்.பி.ஏ., மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், சேவூரை சேர்ந்த மேலும், ஒருவரை போலீசார் கைது செய்தனர்.கர்நாடகா மாநிலம், மைசூரு நகரில் எம்.பி.ஏ., படித்து கொண்டிருந்த, 23 வயது மாணவி ஒருவர், தன் நண்பருடன் கடந்த 24ம் தேதி சாமுண்டி மலை அடிவாரத்தில் பேசி கொண்டிருந்தார்.ஏழு பேர் கொண்ட கும்பலால் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். நண்பரும் தாக்கப்பட்டார். இது தொடர்பாக, ஈரோடு மாவட்டம், தாளவாடியை சேர்ந்த பூபதி, ஜோசப், அவிநாசி அருகே சேவூர் பகுதியை சேர்ந்த அரவிந்த், முருகேசன், 17 வயது சிறுவன் உட்பட, ஆறு பேரை போலீசார் கைது செய்தனர்.இவ்வழக்கில் தொடர்புடைய மற்றொரு நபரை இரு மாநில தனிப்படை போலீசார் தேடி வந்தனர். தாளவாடியில் பதுங்கியிருந்த, சேவூர், ஆலத்துாரை சேர்ந்த செல்வராஜ், 30, என்பவரை, திருப்பூர் மாவட்ட தனிப்படை போலீசார் பிடித்தனர். அவரை, கர்நாடகா போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X