கோர்ட் செய்தி

தமிழ்நாடு

ஜப்திக்கு வந்த கோர்ட் ஊழியர்கள் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

Added : செப் 08, 2021
Share
Advertisement
விழுப்புரம்:ஆதிதிராவிடர் நலத்துறை கையகப்படுத்திய இடத்திற்கு இழப்பீடு வழங்காததால், விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் ஜப்தி செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.விழுப்புரம் அடுத்த தாதம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம், 68; இவருக்கு சொந்த மாக 4.75 ஏக்கர் நிலம் இருந்தது.இந்த இடம், 1996ல் ஏழைகளுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்
 ஜப்திக்கு வந்த கோர்ட் ஊழியர்கள் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

விழுப்புரம்:ஆதிதிராவிடர் நலத்துறை கையகப்படுத்திய இடத்திற்கு இழப்பீடு வழங்காததால், விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் ஜப்தி செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம் அடுத்த தாதம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம், 68; இவருக்கு சொந்த மாக 4.75 ஏக்கர் நிலம் இருந்தது.இந்த இடம், 1996ல் ஏழைகளுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் கையகப்படுத்தப்பட்டது.

இதற்காக அவருக்கு, 1999ம் ஆண்டில் 3 லட்சத்து 70 ஆயிரத்து 886 ரூபாய் இழப்பீடு வழங்கப் பட்டது. மீதமுள்ள இழப்பீட்டுத் தொகை ஒரு லட்சத்து 94 ஆயிரம் ரூபாயை ஆதிதிராவிடர் நலத்துறை வழங்கவில்லை.இது குறித்து ராமலிங்கம், விழுப்புரம் முதன்மை சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இடையில், ராமலிங்கம் உடல் நலக்குறைவால் இறந்தார். அவரது மகன் இளந்திரையன் மனுதாரராக சேர்க்கப்பட்டார்.இந்நிலையில், 'ஆதிதிராவிடர் நலத்துறை, ராமலிங்கம் குடும்பத்திற்கு வட்டியோடு 2 லட்சத்து 31 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்' என கோர்ட் உத்தரவிட்டது.

ஆனால், இழப்பீடு வழங்கவில்லை. இதையடுத்து, கோர்ட் உத்தரவின்படி, விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலக பொருட்களை ஜப்தி செய்ய, கோர்ட் ஊழியர்கள் சென்றனர்.டி.ஆர்.ஓ., ராஜசேகரன் பேச்சு நடத்தி, ஒரு வாரத்திற்குள் இழப்பீட்டு தொகையை வழங்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.இதை ஏற்று, தற்காலிகமாக ஜப்தி நடவடிக்கையை கைவிட்டு திரும்பினர்.


அரசு பஸ் ஜப்தி

விழுப்புரம் மாவட்டம், வானுார், மயிலம் சாலையைச் சேர்ந்தவர் ஏழுமலை, 42; கரும்பு வெட்டும் தொழிலாளி. இவர் 2016 செப்., 5ம் தேதி அரசு பஸ் மோதி இறந்தார். இவரது மனைவி சிவரமணி, 35 இழப்பீடு கோரி, திண்டிவனம் விரைவு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். விசாரித்த நீதிபதி, '5 லட்சம் ரூபாய் மற்றும் வழக்கு செலவு தொகையை அரசு போக்குவரத்துக் கழகம் வழங்க வேண்டும்' என கடந்த ஆண்டு பிப்., 20ல் உத்தரவிட்டார்.

நஷ்டஈடு வழங்காததால், சிவரமணி தரப்பில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. வட்டித் தொகை சேர்த்து, 12 லட்சத்து 65 ஆயிரத்து 358 ரூபாய் நஷ்டஈடு வழங்க கோர்ட் உத்தரவிட்டது.நஷ்டஈடு தராமல் காலம் தாழ்த்தியதால், அரசு பஸ்சை ஜப்தி செய்ய, ஆகஸ்ட் 17ல் நீதிபதி சுதா உத்தரவிட்டார்.

நேற்று காலை 8:15 மணியளவில், சென்னையில் இருந்து புதுச்சேரி வந்த விழுப்புரம் கோட்ட அரசு பஸ்சை, திண்டிவனம் மேம்பாலத்தின் கீழ், நீதிமன்ற சீனியர் கட்டளை நிறைவேற்றுனர் லட்சுமி முன்னிலையில், கோர்ட் ஊழியர்கள் ஜப்தி செய்து, நீதிமன்றத்துக்கு எடுத்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X