பொது செய்தி

தமிழ்நாடு

தண்ணீர் இல்லைனாலும் விளைச்சலில் அசத்தலாம்

Added : செப் 08, 2021
Share
Advertisement
நீரின்றி நெற்பயிர் சாகுபடி செய்வது குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், வில்லிவலம் கிராமத்தைச் சேர்ந்த முதுகலை பட்டதாரி விவசாயி எஸ்.வீரராகவன் கூறியதாவது:பாரம்பரிய ரக நெல் சாகுபடிக்கு, இயற்கை உரங்களை பயன்படுத்துவது ஒரு ரகம். இயற்கை வளத்தையே விவசாயத்திற்கு ஏற்ப மாற்றுவது மற்றொரு ரகம்.அதாவது இயற்கையாக கிடைக்கும் மழை நீரை பயன்படுத்தி, சாகுபடி செய்வதே, இயற்றை வள
 தண்ணீர் இல்லைனாலும் விளைச்சலில் அசத்தலாம்

நீரின்றி நெற்பயிர் சாகுபடி செய்வது குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், வில்லிவலம் கிராமத்தைச் சேர்ந்த முதுகலை பட்டதாரி விவசாயி எஸ்.வீரராகவன் கூறியதாவது:

பாரம்பரிய ரக நெல் சாகுபடிக்கு, இயற்கை உரங்களை பயன்படுத்துவது ஒரு ரகம். இயற்கை வளத்தையே விவசாயத்திற்கு ஏற்ப மாற்றுவது மற்றொரு ரகம்.அதாவது இயற்கையாக கிடைக்கும் மழை நீரை பயன்படுத்தி, சாகுபடி செய்வதே, இயற்றை வள விவசாயத்திற்கு கூடுதல் சிறப்பு. அதில் கிடைக்கும் சத்துக்கள், வேறு எந்த அரிசியிலும் கிடைக்காது.ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய நான்கு மாதங்களிலும் இயற்கையாக மழை நீர் கிடைக்கும். அந்த மழை நீருக்கு ஏற்ப, நிலத்தை பண்படுத்தி தயாராக வைத்திருக்க வேண்டும்.

ஆவணி மாதம் புழுதி ஓட்டி, ஏதேனும் ஒரு பாரம்பரிய ரக நெல்லை விதைத்து, கிடைக்கும் மழை நீர் ஈரத்திற்கு ஏற்ப, நெல் சாகுபடி செய்து அறுவடை செய்யலாம். கிடைக்கும் மகசூல் குறைவாக இருந்தாலும், ஊட்டச்சத்து நிறைந்த விளைப்பொருளாக மாற்றி, கூடுதல் வருவாய்க்கு வழிவகுக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.தொடர்புக்கு: 98941 20278

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X