பொது செய்தி

தமிழ்நாடு

சில வரி செய்திகள்: ஊர்ப்புற நூலகர்கள் நிவாரண நிதி

Added : செப் 08, 2021
Share
Advertisement
தமிழ்நாடு பொது நுாலத்துறை ஒருங்கிணைந்த ஊர்ப்புற நுாலகர்கள் நல அமைப்பு சார்பில், கொரோனா நிதி வழங்கப்பட்டது.தமிழகத்தில் அரசு பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் பொது நுாலகத்துறையில், 1520 பேர் ஊர்ப்புற நுாலகர்களாக பணியாற்றி வருகின்றனர். இவர்கள் சார்பில், 1.6 லட்சம் ரூபாய் கொரோனாக நிவாரண நிதி, கல்வி அமைச்சர் மகேஷ் பொய்யாமொழியிடம் வழங்கப்பட்டுள்ளது.இந்த தகவலை, ஊர்ப்புற

தமிழ்நாடு பொது நுாலத்துறை ஒருங்கிணைந்த ஊர்ப்புற நுாலகர்கள் நல அமைப்பு சார்பில், கொரோனா நிதி வழங்கப்பட்டது.தமிழகத்தில் அரசு பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் பொது நுாலகத்துறையில், 1520 பேர் ஊர்ப்புற நுாலகர்களாக பணியாற்றி வருகின்றனர். இவர்கள் சார்பில், 1.6 லட்சம் ரூபாய் கொரோனாக நிவாரண நிதி, கல்வி அமைச்சர் மகேஷ் பொய்யாமொழியிடம் வழங்கப்பட்டுள்ளது.இந்த தகவலை, ஊர்ப்புற நுாலகர்கள் நல அமைப்பின் மாநில துணைச்செயலாளர் நாகராஜன் தெரிவிததார்.

சூயஸ் ஒப்பந்தம் ரத்து; காங்.,கோரிக்கை

மாநகராட்சி பகுதிகளில் சூயஸ் நிறுவனம் மூலம் குடிநீர் வினியோகம் செய்யும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி, காங்., மாநில செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார், தமிழக முதல்வருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.கடிதத்தில், 'குடிநீர் வினியோகத்தை தனியார் நிறுவனத்துக்கு வழங்குவதால், ஏழை மக்கள் பாதிக்கப்படுவர். ஊழல் நடந்திருப்பதாக தகவல்கள் தெரிவிப்பதால், சூயஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்' என கூறியுள்ளார்.

மரக்கன்று நடும் விழா

கோவை பாரதியார் பல்கலை மகளிர் மேம்பாட்டு மையம், கணினி அறிவியல் துறை, மனித மரபியல் மூலக்கூறு உயிரியல் துறைகள் சார்பில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, முள்சீத்தா மரக்கன்று வழங்கல் முகாம் நடந்தது.துணைவேந்தர் குமார் தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சியில், பதிவாளர் (பொறுப்பு) முருகவேல், ரூசா., ஒருங்கிணைப்பாளர் அங்கையர்கண்ணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இலவச சமஸ்கிருத வகுப்பு

சமஸ்கிருத பாரதி அமைப்பு சார்பில், இணைய வழியில் இலவச சமஸ்கிருத வகுப்பு நடத்தப்படுகிறது. வரும் 12 முதல் 26ம் தேதி வரை, 15 நாட்கள், தினமும், 75 நிமிடம் நடக்கும் இவ்வகுப்பில், 13 வயதுக்கு மேற்பட்டவர்கள் பங்கேற்கலாம். இவ்வகுப்புகள், Free ConferenceCall.com என்ற செயலியின் மூலம் நடத்தப்படுகிறது. முன்பதிவுக்கு, https://tinyurl.com/onlinesamskritam.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X