பொது செய்தி

தமிழ்நாடு

மாநகர போலீசில் புதிய சரகங்கள் பிரிப்பு! துணை கமிஷனர்களுக்கு பொறுப்பு

Added : செப் 08, 2021
Share
Advertisement
கோவை:கோவை மாநகர போலீசில் சட்டம்-ஒழுங்கு, புல னாய்வு பிரிவு என்று தனிதனியாக துணை கமிஷனர்கள் நியமிக்கப்பட்டு செயல்பட்டு வந்த நடைமுறை மாற்றப்பட்டு, துணை கமிஷனர் வடக்கு மற்றும் தெற்கு என்று மாற்றப்பட உள்ளனர்; சிங்காநல்லுார், உக்கடம், ஆர்.எஸ்.புரம் என, ஏழு சரகங்கள் புதிதாக பிரிக்கப்படுகின்றன.கோவை மாநகர போலீஸ் கமிஷனர் கட்டுப்பாட்டின் கீழ், 15 சட்டம்- ஒழுங்கு, 15 புலனாய்வு

கோவை:கோவை மாநகர போலீசில் சட்டம்-ஒழுங்கு, புல னாய்வு பிரிவு என்று தனிதனியாக துணை கமிஷனர்கள் நியமிக்கப்பட்டு செயல்பட்டு வந்த நடைமுறை மாற்றப்பட்டு, துணை கமிஷனர் வடக்கு மற்றும் தெற்கு என்று மாற்றப்பட உள்ளனர்; சிங்காநல்லுார், உக்கடம், ஆர்.எஸ்.புரம் என, ஏழு சரகங்கள் புதிதாக பிரிக்கப்படுகின்றன.

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் கட்டுப்பாட்டின் கீழ், 15 சட்டம்- ஒழுங்கு, 15 புலனாய்வு பிரிவு, 3 அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன்கள், போக்குவரத்து பிரிவு, போக்குவரத்து புலனாய்வு பிரிவு, மாநகர குற்றப்பிரிவு, சைபர் க்ரைம் உள்பட பல்வேறு சிறப்பு பிரிவுகள் செயல்படுகின்றன.

இந்நிலையில், சட்டம்-ஒழுங்கு, புலனாய்வு பிரிவு என்று தனித்தனியாக இருந்தது மாற்றப்பட்டு, துணை கமிஷனர்(வடக்கு) மற்றும் துணை கமிஷனர்(தெற்கு) என, நியமிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.இதன்படி, துணை கமிஷனர்(வடக்கு) கட்டுப்பாட்டின் கீழ் மாநகரில் ஆர்.எஸ்.புரம், உக்கடம், காட்டூர், சாய்பாபாகாலனி ஆகிய நான்கு சரகங்கள் உதயமாக உள்ளன. ஆர்.எஸ்.புரம் சரகத்தில் பெரியகடைவீதி, ஆர்.எஸ்.புரம் சட்டம்-ஒழுங்கு, குற்றப்பிரிவு போலீஸ் ஸ்டேஷன்கள் வருகின்றன.

உக்கடம் சரகத்தில் வெரைட்டிஹால் ரோடு மற்றும் உக்கடம் சட்டம்-ஒழுங்கு, குற்றப்பிரிவு போலீஸ் ஸ்டேஷன்கள் இடம் பெறுகின்றன. காட்டூர் சரகத்தில், காட்டூர் மற்றும் ரேஸ்கோர்ஸ் சட்டம்-ஒழுங்கு, குற்றப்பிரிவு போலீஸ் ஸ்டேஷன்களும், சாய்பாபாகாலனி சரகத்தில் சாய்பாபாகாலனி, ரத்தினபுரி போலீஸ் ஸ்டேஷன் இடம் பெறுகிறது.இதனுடன், மேற்கு மற்றும் மத்திய பகுதி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன்கள், பெண்களுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு, கட்டுப்பாட்டு அறை, நெடுஞ்சாலை ரோந்து பணி உள்ளிட்டவை வருகின்றன.துணை கமிஷனர்(தெற்கு) கட்டுப்பாட்டின் கீழ், சிங்காநல்லுார், போத்தனுார், குனியமுத்துார் சரகங்கள் பிரிக்கப்பட உள்ளன.

இதில், சிங்காநல்லுார் சரகத்தில் சிங்கநல்லுார், பீளமேடு மற்றும் சரவணம்பட்டி சட்டம்-ஒழுங்கு, குற்றப்பிரிவு போலீஸ் ஸ்டேஷன்கள் இடம்பெறுகின்றன.போத்தனுார் சரகத்தில் ராமநாதபுரம், போத்தனுார் சட்டம்-ஒழுங்கு, குற்றப்பிரிவும், குனியமுத்துார் சரகத்தில், செல்வபுரம், குனியமுத்துார் சட்டம்-ஒழுங்கு, குற்றப்பிரிவு போலீஸ் ஸ்டேஷன்கள் இடம்பெற உள்ளன. இவற்றுடன் மதுவிலக்கு அமலாக்க பிரிவு, கிழக்கு பகுதி அனைத்து மகளிர், குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு உள்ளிட்டவையும் துணை கமிஷனர் (தெற்கு) கட்டுப்பாட்டின் கீழ்செயல்பட உள்ளன.

தலைமையிட துணை கமிஷனரின் கீழ் 'சைபர் க்ரைம்' போலீஸ், சைபர் லேப், மாநகர குற்றப்பிரிவு, மோப்பநாய் பிரிவு, நில அபகரிப்பு தடுப்பு பிரிவு உள்ளிட்டவை செயல்பட உள்ளன. போக்குவரத்து மற்றும் ஆயுதப்படை துணை கமிஷனர்களுக்கு பழைய நிலையே தொடர உள்ளது.இந்த புதிய நடைமுறை மாற்றம் மூலம் சட்டம்-ஒழுங்கு, புலனாய்வு பிரிவு என்று இல்லாமல், துணை கமிஷனர் வடக்கு மற்றும் தெற்கு ஆகியோரின் கீழ் அந்தந்த சரக சட்டம்-ஒழுங்கு, குற்றப்பிரிவு போலீசார் இயங்க உள்ளனர்.

'அரசாணை வெளியிடப்பட்டுள்ளது'மாநகர போலீஸ் கமிஷனர் தீபக் தாமோர் கூறுகையில், ''மாநிலம் முழுவதுமுள்ள அனைத்து மாநகர போலீசிலும், இந்த நடைமுறை மாற்றம் செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக துறை ரீதியான உத்தரவு கிடைத்ததும், சரகங்கள் பிரித்து துணை கமிஷனர்கள் அதற்கு ஏற்ப செயல்பட துவங்குவார்கள். கோவை மாநகரில் கடந்த ஜூனில் இருந்து குற்றப்பிரிவு என்பது, புலனாய்வு பிரிவாக மாற்றப்பட்டு செயல்பட்டு வருகிறது,'' என்றார்.இதுவரை இப்படித்தான்!கமிஷனரின் கீழ் சட்டம்-ஒழுங்கு துணை கமிஷனர், புலனாய்வு பிரிவு(முன்பு குற்றப்பிரிவு), போக்குவரத்து, தலைமையிட மற்றும் ஆயுதப்படை துணை கமிஷனர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இவர்களில் சட்டம்-ஒழுங்கு துணை கமிஷனரின் கீழ் மாநகரிலுள்ள, 15 சட்டம்-ஒழுங்கு, 3 அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன்கள், மதுவிலக்கு அமலாக்க பிரிவு, சமூக நீதி-மனித உரிமை, கட்டுப்பாட்டு அறை, நெடுஞ்சாலை ரோந்து உள்ளிட்டவை செயல்படுகின்றன.புலனாய்வு(குற்றப்பிரிவு) பிரிவு துணை கமிஷனரின் கீழ், 15 புலனாய்வு பிரிவு போலீஸ் ஸ்டேஷன்கள், சைபர் க்ரைம், மாநகர குற்றப்பிரிவு, நில அபகரிப்பு தடுப்பு பிரிவு, மாநகர குற்ற ஆவண காப்பகம், குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு, மோப்பநாய் பிரிவுகள் செயல்படுகின்றன. போக்குவரத்து பிரிவு துணை கமிஷனரின் கீழ் போக்குவரத்து பிரிவு, போக்குவரத்து புலனாய்வு பிரிவும், தலைமையிட துணை கமிஷனரின் கீழ் 'அட்மின்' பணிகளும், ஆயுதப்படை துணை கமிஷனரின் கீழ் ஆயுதப்படையும் உள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X