பொது செய்தி

தமிழ்நாடு

என்னது, ரேஷன் கடைகளில் அரிசி கடத்தலா! கொதித்தார் கலெக்டர்; நடந்தது திடீர் ஆய்வு

Added : செப் 08, 2021
Share
Advertisement
கோவை:கலெக்டர் சமீரனின் திடீர் உத்தரவால், ரேஷன் கடைகளில் வழங்கல் துறை அதிகாரிகள்நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.விநாயகர் சதுர்த்தி விழா நடத்துவது தொடர்பாக, நேற்று கலெக்டர் அலுவலகத்தில் வருவாய் மற்றும் போலீஸ் அதிகாரிகள் பங்கேற்ற கூட்டம் நடந்தது.இதில் விநாயகர் சதுர்த்தி விழா குறித்து பேசி நிறைவுறும் தருவாயில், இந்து அமைப்பு நிர்வாகி ஒருவர், 'கோவையின் மேற்கு

கோவை:கலெக்டர் சமீரனின் திடீர் உத்தரவால், ரேஷன் கடைகளில் வழங்கல் துறை அதிகாரிகள்நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.விநாயகர் சதுர்த்தி விழா நடத்துவது தொடர்பாக, நேற்று கலெக்டர் அலுவலகத்தில் வருவாய் மற்றும் போலீஸ் அதிகாரிகள் பங்கேற்ற கூட்டம் நடந்தது.இதில் விநாயகர் சதுர்த்தி விழா குறித்து பேசி நிறைவுறும் தருவாயில், இந்து அமைப்பு நிர்வாகி ஒருவர், 'கோவையின் மேற்கு பகுதியிலுள்ள ரேஷன் கடைகளில், அரிசி கடத்தல் பகிரங்கமாக நடக்கிறது. பயோமெட்ரிக் பயன்பாடு சரிவர மேற்கொள்ளப்படுவதில்லை, ரேஷன்கார்டுதாரர்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர். அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்வதில்லை. சிறப்பான முறையில் மாவட்ட நிர்வாகம் நடக்கிறது என்று சொல்லப்படுகிறது. ஆனால் பணிகளால் கிடைக்கும் நற்பலன்கள் மக்களை சென்றடையவில்லை' என்று ஆதங்கப்பட்டார்.கூட்டம் முடிந்தவுடன் மாவட்ட வழங்கல் துறை அலுவலர் குமரேசனை அழைத்த கலெக்டர், புகார் பற்றி விசாரித்தார். உடனடியாக சம்மந்தப்பட்ட ரேஷன் கடைகள் ஒன்று விடாமல், ஆய்வு மேற்கொள்ள உத்தரவு பிறப்பித்தார்.இதையடுத்து, கோவை தடாகம் சாலை, ம.ந.க.,வீதி, சலிவன் வீதி, கருப்பகவுண்டர் வீதி, தர்மராஜாகோவில் வீதி, தெலுங்கு வீதி, செல்வபுரம், தெலுங்குபாளையம், பனைமரத்துார், நாகராஜபுரம், பேரூர் வரை உள்ள பெரும்பாலான ரேஷன்கடைகளில், வழங்கல் துறை ஆய்வாளர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.மாவட்ட வழங்கல் துறை அலுவலர் குமரேசன் கூறுகையில், ''கலெக்டர் அறிவுறுத்தலின் பேரில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வு அறிக்கை இரவுதான் வரும். அதன் பின்புதான், உண்மை நிலை தெரிய வரும்,''என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X