பொது செய்தி

தமிழ்நாடு

அரசு கல்லுாரியில் முதல்கட்ட கலந்தாய்வு நேற்று நிறைவு

Added : செப் 08, 2021
Share
Advertisement
கோவை:அரசு கலை கல்லுாரியில் முதல்கட்ட கலந்தாய்வு நேற்று நிறைவு பெற்றுள்ள நிலையில், இரண்டாம் கட்ட கலந்தாய்வு 11ம் தேதி துவங்கும் என, கல்லுாரி நிர்வாக தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.கொரோனா காரணமாக, தரவரிசையில் முன்னிலையில் இருந்த மாணவர்கள் மட்டுமே அழைக்கப்பட்டதால், 50 சதவீத இடங்களே முதல்கட்ட கலந்தாய்வில் நிரம்பியுள்ளன.இக்கல்லுாரியில், முதலாமாண்டில், 1433 மாணவர்கள்

கோவை:அரசு கலை கல்லுாரியில் முதல்கட்ட கலந்தாய்வு நேற்று நிறைவு பெற்றுள்ள நிலையில், இரண்டாம் கட்ட கலந்தாய்வு 11ம் தேதி துவங்கும் என, கல்லுாரி நிர்வாக தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.கொரோனா காரணமாக, தரவரிசையில் முன்னிலையில் இருந்த மாணவர்கள் மட்டுமே அழைக்கப்பட்டதால், 50 சதவீத இடங்களே முதல்கட்ட கலந்தாய்வில் நிரம்பியுள்ளன.இக்கல்லுாரியில், முதலாமாண்டில், 1433 மாணவர்கள் சேர்க்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. முதல்கட்ட கலந்தாய்வு முடிவில், 715 பேர்விரும்பிய இடங்களில் சேர்ந்துள்ளனர்; 718 இடங்கள் காலியாகவுள்ளன.தற்போது, மாநில அரசு கூடுதல் மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதியளித்துள்ள நிலையில், அடுத்த கட்ட கலந்தாய்வில் கூடுதலாக இடங்கள் சேர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.இரண்டாம் கட்டமாக, 11ம் தேதி வணிகவியல், வணிகவியல் சி.ஏ., ஐ.பி., பி.பி.ஏ., பாடங்களுக்கும், 13ம் தேதி வேதியியல், கணிதம், இயற்பியல், கணினி அறிவியல் தகவல் தொழில்நுட்பம், உளவியல் துறைகளுக்கும், 14ம் தேதி புள்ளியியல், தாவரவியல், விலங்கியல், புவி அமைப்பியல், புவியியல், 15ம் தேதி பொருளாதாரம், பாதுகாப்பியல், பொதுநிர்வாகம், அரசியல் அறிவியல், 16ம் தேதி தமிழ், ஆங்கிலம், வரலாறு, சுற்றுலா மற்றும் பயண மேலாண்மை பாடங்களுக்கும் கலந்தாய்வு நடக்கும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X