தொழிலாளர்களுக்கு வீடு கட்டும் திட்டத்துக்கு வரவேற்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தொழிலாளர்களுக்கு வீடு கட்டும் திட்டத்துக்கு வரவேற்பு

Added : செப் 08, 2021
Share
கோவை:கட்டுமான தொழிலாளர்களின் வாழ்க்கை தரம் உயர்த்தும் விதமானஅறிவிப்புகளுக்கு, கோவை மாவட்ட கட்டுமான, அமைப்புசாரா அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு நன்றி தெரிவித்துள்ளது.கூட்டு நடவடிக்கைக்குழு ஒருங்கிணைப்பாளர்கள் முருகேசன், கிருஷ்ணசாமி அறிக்கை:தமிழக 'பட்ஜெட்' உரையில், 10 ஆண்டுகளுக்கும் மேலாக தொய்வடைந்து கிடந்த, ஐ.டி.ஐ., பாலிடெக்னிக் ஆகியவற்றை

கோவை:கட்டுமான தொழிலாளர்களின் வாழ்க்கை தரம் உயர்த்தும் விதமானஅறிவிப்புகளுக்கு, கோவை மாவட்ட கட்டுமான, அமைப்புசாரா அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு நன்றி தெரிவித்துள்ளது.கூட்டு நடவடிக்கைக்குழு ஒருங்கிணைப்பாளர்கள் முருகேசன், கிருஷ்ணசாமி அறிக்கை:தமிழக 'பட்ஜெட்' உரையில், 10 ஆண்டுகளுக்கும் மேலாக தொய்வடைந்து கிடந்த, ஐ.டி.ஐ., பாலிடெக்னிக் ஆகியவற்றை ஊக்குவிக்கும் விதமாகவும், தொழிற்கல்விக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.ஆட்டோ தொழிலாளர்களுக்கு விபத்து மரண நிதி, 2 லட்சமாகவும், கட்டுமானம் மற்றும் ஆட்டோ தொழிலாளர்குடும்பத்துக்கு இயற்கை மரண நிதி, 50 ஆயிரமாகவும், அமைப்பு சாரா தொழிலாளிக்கு விபத்துகால மரணத்துக்கு, 1.25 லட்சமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.இதனால், 10 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பயன்பெறுவர்.இவ்வாறு, அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X