ஸ்ரீ கிருஷ்ணா கல்லுாரிக்கு சிறந்த துாய்மை வளாக விருது| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஸ்ரீ கிருஷ்ணா கல்லுாரிக்கு சிறந்த துாய்மை வளாக விருது

Added : செப் 08, 2021
Share
கோவை:ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிக்கு, தேசிய அளவில் சிறந்த தூய்மை வளாக விருதை மத்திய அரசின் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.,) வழங்கி கவுரவித்துள்ளது.ஏ.ஐ.சி.டி.இ., சார்பில் கல்லுாரிகளை ஊக்குவிக்கும் வகையில் கல்வித்தரம், துாய்மை வளாகம் உள்ளிட்ட பல்வேறு விருதுகள்ஆண்டுதோறும் வழங்கி வருகிறது. கொரோனா காரணமாக, 2020ம் ஆண்டுக்கான

கோவை:ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிக்கு, தேசிய அளவில் சிறந்த தூய்மை வளாக விருதை மத்திய அரசின் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.,) வழங்கி கவுரவித்துள்ளது.ஏ.ஐ.சி.டி.இ., சார்பில் கல்லுாரிகளை ஊக்குவிக்கும் வகையில் கல்வித்தரம், துாய்மை வளாகம் உள்ளிட்ட பல்வேறு விருதுகள்ஆண்டுதோறும் வழங்கி வருகிறது. கொரோனா காரணமாக, 2020ம் ஆண்டுக்கான விருது சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில், சிறந்த துாய்மை வளாக விருது வழங்கும் நிகழ்ச்சி, 5ம் தேதி டில்லியில் நடந்தது.இதில், குனியமுத்துார் ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி தேசிய அளவில் மூன்றாம் இடத்தை பெற்றது. டில்லியில் நடந்த நிகழ்ச்சியில், முதல்வர் ஜேனட், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானிடம் இருந்து இவ்விருதை பெற்றார். கடந்தாண்டும் இவ்விருதை இக்கல்லுாரி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.இக்கல்விக்குழும நிர்வாக அறங்காவலர் மலர்விழி, சி.இ.ஓ., சுந்தரராமன் விருது பெற காரணமாக இருந்த பேராசிரியர்கள், மாணவர்கள், துாய்மை பணியாளர்கள், அலுவலர்களை பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X