பொது செய்தி

தமிழ்நாடு

குப்பைத்தொட்டியில் மருத்துவ கழிவு வீசுவதா! தனியார் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கை

Added : செப் 08, 2021
Share
Advertisement
கோவை:மருத்துவ கழிவுகளை பொது குப்பை தொட்டியில் வீசினால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என, தனியார் மருத்துவமனைகள், கிளினிக்குகள் மற்றும் ஆய்வகங்களை மாநகராட்சி எச்சரித்துள்ளது.கோவை நகர் பகுதியில் உருவாகும் மக்கும்/மக்காத குப்பையை சேகரிப்பதே மாநகராட்சி வேலை. மருத்துவ கழிவுகளை, அந்தந்த மருத்துவமனை நிர்வாகங்களே கையாள வேண்டும். இதற்கென நியமிக்கப்பட்டுள்ள தனியார்

கோவை:மருத்துவ கழிவுகளை பொது குப்பை தொட்டியில் வீசினால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என, தனியார் மருத்துவமனைகள், கிளினிக்குகள் மற்றும் ஆய்வகங்களை மாநகராட்சி எச்சரித்துள்ளது.கோவை நகர் பகுதியில் உருவாகும் மக்கும்/மக்காத குப்பையை சேகரிப்பதே மாநகராட்சி வேலை. மருத்துவ கழிவுகளை, அந்தந்த மருத்துவமனை நிர்வாகங்களே கையாள வேண்டும். இதற்கென நியமிக்கப்பட்டுள்ள தனியார் நிறுவனங்களிடம் வழங்கி, 'இன்சினரேட்டர்' மூலம் எரியூட்ட வேண்டும்.மாநகராட்சி எல்லைக்குள் இரு நிறுவனங்கள், மருத்துவ கழிவுகளை கையாள்கின்றன. அதில், ஒரு நிறுவனம், கழிவுகளை சேகரிக்காமல், பில் தொகை மட்டும் கேட்பதாக புகார் எழுந்துள்ளது. கழிவுகளை அகற்ற முடியாமல் தவிக்கும் மருத்துவமனை நிர்வாகங்கள், மாநகராட்சி துாய்மை பணியாளர்களிடம் வழங்குவதாக பிரச்னை எழுந்துள்ளது. சில மருத்துவமனைகள் இரவு அல்லது அதிகாலை நேரங்களில் பொது குப்பை தொட்டியில் வீசி விடுகின்றன. இவை, வெள்ளலுார் கிடங்கில் கொட்டும்போதோ அல்லது குப்பை மாற்று மையத்தில் லாரிக்கு மாற்றும்போதோ தெரியவருகிறது.இதற்கு தீர்வு காண முடிவு செய்த மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால், தனியார் மருத்துமவனைகள், கிளினிக்குகள் மற்றும் ஆய்வக நிர்வாகிகளை அழைத்து, அறிவுரை வழங்க உத்தரவிட்டார். அதன்படி, துணை கமிஷனர் விமல்ராஜ் தலைமையில் கூட்டம் நடந்தது. அதில், மருத்துவ கழிவுகளை கையாள்வது தொடர்பாக அறிவுரை வழங்கப்பட்டது.'சம்பந்தப்பட்ட ஏஜன்சிகளிடம் மட்டுமே கொடுக்க வேண்டும்; பொது தொட்டியில் கொட்டக்கூடாது. மீறினால், சுகாதாரச் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்' என, விமல்ராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X