மதுக்கரை:மதுக்கரை மார்க்கெட் பகுதியிலிருந்து மரப்பாலம் செல்லும் வழியில், எம்.ஜி.ஆர்., நகர், சஞ்சய் நகர் பகுதிகள் அருகே சுமார், 70 அடி ஆழமுள்ள கல்லுக்குழி உள்ளது. இங்கு மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளிலிருந்து கட்டட கழிவுகளை கொட்ட அனுமதிக்கப்படுகிறது.இந்நிலையில், இங்கு கடந்த இரு வாரங்களாக போத்தனூரில் குப்பைக்கழிவு கொட்டப்படும் இடத்திலிருந்து, கழிவுகளை அரைத்த பின் தேங்கும் கழிவுக்கற்கள் கொண்டு வரப்பட்டு, கொட்டப்படுகிறது.
இதிலிருந்து துர்நாற்றம் வருவதாக, இப்பகுதிகளில் வசிப்போர் இரு நாட்களுக்கு முன், மதுக்கரை தாலுகா தாசில்தார் நாகராஜனிடம் புகார் மனு கொடுத்தனர்.இந்நிலையில், நேற்று காலை கழிவுக் கற்களுடன் வந்த டிப்பர் லாரிகளை, அப்பகுதியை சேர்ந்த, 20 பேர் தடுத்து நிறுத்தி, கழிவுக்கற்களை கொட்ட எதிர்ப்பு தெரிவித்தனர். லாரிகள் கழிவுக்கற்களுடன் திரும்பிச் சென்றன.அப்பகுதியினர் கூறுகையில், 'கழிவு கற்களை கொட்டுவதால், நிலத்தடி நீர் பாதிக்கப்படலாம். துர்நாற்றம் வீசுவதுடன், கொசு, ஈ தொல்லைகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. 'கட்டட கழிவுகளை கொட்ட நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. கழிவுகள் கொட்டுவது தொடர்ந்தால், போராட்டம் நடத்தப்படும்' என்றனர். '
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE